ஜனநாயகன் படத்திலிருந்து ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி உள்ளது.
விஜயின் 69ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. முழு நேர அரசியல்வாதியாக மாறி உள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் ஜனநாயகன் திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவருடைய கடைசி படத்தை திருவிழா போல் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து ஏகப்பட்ட அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் இருந்து ‘தளப(தீ) கச்சேரி’ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அறிவு பாடல் வரிகளை எழுதியுள்ளார். சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

வழக்கம்போல் நடிகர் விஜய், இந்த பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடியுள்ளார். இந்த பாடலில் பூஜா ஹெக்டே, மமிதா ஆகியோரும் விஜயுடன் இணைந்து நடனமாடியுள்ளனர். அனிருத்தின் இசையில் வெளியான இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


