ரெட்ரோ படத்திலிருந்து THE ONE பாடல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை பீட்சா ,பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். 2D நிறுவனமும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு இப்படம் வெளியாக இருப்பதால் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தில் இருந்து வெளியாகும் அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏற்கனவே வெளியான கண்ணாடி பூவே, கனிமா ஆகிய பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து THE ONE எனும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கும் நிலையில் விவேக் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். கூஸ்பம்ஸ் தரும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.