spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News'சர்தார் 2' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

-

- Advertisement -

சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.'சர்தார் 2' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்தார் திரைப்படம் வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

அதேசமயம் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்திக்கு விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. எனவே ஓய்விற்கு பின் நடிகர் கார்த்தி தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ