spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஇணையத்தை கலக்கும் 'ஜெயிலர் 2' ப்ரோமோ..... மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

இணையத்தை கலக்கும் ‘ஜெயிலர் 2’ ப்ரோமோ….. மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசரின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இணையத்தை கலக்கும் 'ஜெயிலர் 2' ப்ரோமோ..... மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவுப்பு டீசர் கடந்த ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸாக என்ட்ரி கொடுத்து அலப்பறையை கிளப்பியிருந்தார். இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

we-r-hiring

இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த ப்ரோமோவில் ஆரம்பத்தில் காட்டப்படுவது நடிகை ரஜினி இல்லை, அவருடைய டூப் என பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் அது ரஜினி தான் என்பதை உறுதி செய்யும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 அறிவுப்பு டீசரின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

MUST READ