HomeBreaking Newsபார்வையிலேயே மிரட்டும் சூர்யா..... 'ரெட்ரோ' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

பார்வையிலேயே மிரட்டும் சூர்யா….. ‘ரெட்ரோ’ பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

ரெட்ரோ படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது.பார்வையிலேயே மிரட்டும் சூர்யா..... 'ரெட்ரோ' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

சூர்யாவின் 44 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சூர்யாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. பார்வையிலேயே மிரட்டும் சூர்யா..... 'ரெட்ரோ' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியான கனிமா பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் சூர்யா, பார்வையிலேயே மிரட்டுகிறார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ