HomeBreaking Newsதமிழக பட்ஜெட்: பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்வி துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்: பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்வி துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு

-

- Advertisement -

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (05.08.2026) தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி

we-r-hiring

வெற்றி மடிக்கணினி மற்றும் நவீன சைக்கிள் திட்டங்கள்:

  • கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் ‘வெற்றி மடிக்கணினி’ திட்டத்திற்காக ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 11-ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டில்களுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி மற்றும் மாணவர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:

  • அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ. 2,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ‘சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும்.

  • பள்ளிப் பாடத்திட்டங்களை காலத்திற்கு ஏற்பச் சீரமைக்க ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ‘தமிழ்நாடு சுடர்’ திட்டத்திற்கு ரூ. 3,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பள்ளிகளில் பாடம் முடிந்த பிறகு, மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க தினமும் 1 மணி நேரம் விளையாட்டுக்காக தனியாக ஒதுக்கப்படும்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை:

பள்ளிகளில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், புகார்களைத் தெரிவிக்க 1058 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free Number) அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், சிறப்புப் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பை உருவாக்க ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் திறன் மேம்பாடு:

  • மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் புதிய அரசுச் சட்டக்கல்லூரி அமைக்கப்படும்.

  • 12 லட்சம் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 லட்சம் இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் வகையில் ‘வெற்றி திறன் பயிற்சி’ திட்டத்திற்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தொழிற்பயிற்சியை மேம்படுத்த ரூ. 90 கோடி செலவில் 5 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் (ITI) உருவாக்கப்படும்.

  • போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சிகளுக்கு ரூ. 3.38 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

  • மாணவர்கள் தங்கும் விடுதிகளை மேம்படுத்த ரூ. 10 கோடி மற்றும் பொது நூலகங்களை ‘டிஜிட்டல் நூலகங்களாக’ மாற்ற ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ரத்து நிலைப்பாடு:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான (NEET) நீட் தேர்வை ரத்து செய்து, மேல்நிலைப்பள்ளி (+2) மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசை வலியுறுத்தித் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள்: தவெக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு!

MUST READ