தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக அவர் அறிவித்தார். பேரவைத் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.