விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார். செல்லா அய்யாவு இந்த படத்தை இயக்கியிருந்தார். காமெடி கலந்த ஜானரில் ஒரு குடும்பப் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து கட்டா குஸ்தி – பார்ட் 2 உருவாகப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி தற்போது கட்டா குஸ்தி 2nd Round படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருவதோடு எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கின்றனர்.
Second Round Begins 🥊🔔 @VelsFilmIntl & @VVStudioZ proudly announce#GattaKusthi2 ❤️🔥
Announcement Promo ▶️https://t.co/KyUAeQFLMzA film by @ChellaAyyavu 💥
An @RSeanRoldan musical.@IshariKGanesh @TheVishnuVishal @AishuL_ @kushmithaganesh @nitinsathyaa #Karunaas… pic.twitter.com/RJ9QPhRsmZ— Vels Film International (@VelsFilmIntl) September 1, 2025

முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இரண்டாம் பாகத்தையும் இயக்க, முதல் பாகத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ் காந்த் ஆகியோரும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் படப்பிடிப்பு தொடர்பான மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.