சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் திருச்சி அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அந்த பயணிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என சோதிப்பதற்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே அவருக்கு குரங்கு அம்மை உள்ளதா? அல்லது வேறு காய்ச்சலா என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கின்றன