Homeசெய்திகள்கட்டுரைநாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிரூபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிரூபிப்போம் – அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..

-

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிரூபிப்போம் – அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..

நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுக வின் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் நாங்கள் யார் என்பதை நிருபிப்போம் என்று அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையில் தலைமை பதவிக்கான கடும் போட்டி நிலவி வந்தது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்கள் முழுவதையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. கொங்கு பிரதேசம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக மாறியது. அதே அளவிற்கு ஓபிஎஸ் வேலை செய்திருந்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்திருக்கும். அந்த தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதிமுக மாநாடு

அதிமுக தலைமைக்கான போட்டியிலும் தொண்டர்கள் ஆதரவு, நிர்வாகிகளின் ஆதரவு என எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கி இருந்தது.

படிப்படியாக நடந்த சட்டப் போராட்டத்திலும் ஈபிஎஸ்க்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. ஏப்ரல் மாதம் 16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் மூன்றாவது ஆளுமை மிகுந்த அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அஇஅதிமுக தொண்டர்கள் வழி தெரியாத காட்டில் இறக்கி விடப்பட்ட குழந்தையைப் போல் செய்வதறியாமல் தவித்து வந்தனர்.

எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட மாபெரும் இயக்கத்தின் நிலை என்ன ஆகுமோ என்று கலங்கி நின்றனர். ஆனால் கட்டுக்கோப்புடன் காத்திருந்தனர்.

ஈபிஎஸ் அதிமுகவின் அதிகாரப் பூர்வமான தலைவரானார். லட்சக் கணக்கான நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர். அடிமட்ட தொண்டன் அதிகாரத்திற்கு வரமுடியும் என்பதற்கு உதாரணமாக எடப்பாடியாரை வரலாறு பதிவு செய்துக் கொண்டது.

அதிமுக - எடப்பாடி பழனிசாமி

அவர் தலைமையில் நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள முதல் மாநாடு என்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 20 என்ற தேதி அறிவித்ததும் அதிமுகவினர் சுவர் விளம்பரத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். திரும்பும் திசை எல்லாம் அதிமுக மாநாட்டு விளம்பரத்தை பார்க்க முடிகிறது.

சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அடி, ஆட்சியில் இல்லாத இரண்டாண்டு காலம் கொடுத்த படிப்பினை, அதிமுக இனி அவ்வளவுதான், மீண்டும் எழுந்து நிற்க வாய்ப்பு இல்லை என்று ஏகவசனம் பேசிய எதிரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை ஆகஸ்ட் 20, மதுரை மாநாட்டில் கிடைத்துவிடும் என்று தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

MUST READ