spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜக டீலிங்! சிக்கிய செங்கோட்டையன்! விளாசி தள்ளிய கோட்டீஸ்வரன்!

பாஜக டீலிங்! சிக்கிய செங்கோட்டையன்! விளாசி தள்ளிய கோட்டீஸ்வரன்!

-

- Advertisement -

பாஜகவை நம்பி சென்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு உதாரணமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது மற்றும் அதன் பின்னணி அரசியல் குறித்து  மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகிற போது, பாஜக சொல்லியே தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சொன்னதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை நம்பி, அவர்களின் பின்னால் சென்றவர்கள் எல்லாம் காலாவதியாகி விட்டனர். அதற்கு சமீபத்திய உதாரணமாக செங்கோட்டையன் ஆகி இருக்கிறார். செங்கோட்டையன் முதலில் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் நெருக்கடியை கொடுத்தார். தற்போது என்டிஏ கூட்டணிக்கும் ஒரு நெருக்கடியை கொடுக்கிறார். அப்போது, அதிமுகவை, பாஜக ஆட்டிப்படைக்கிறது என்று சொல்வதற்கு வசதியாக மாற்றிவிட்டார். பாஜக தன்னை வைத்து அதிமுகவை பிளவுபடுத்த வில்லை. ஒன்றிணைக்கவே செய்வதாக செங்கோட்டையன் சொல்கிறார். ஏற்கனவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டு தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டனர். அப்போது அவர்கள் பிரிந்தது உங்களுக்கு தெரியாதா? அல்லது அவர்களை ஒருங்கிணைக்கும் அளவுக்கு சக்தி உள்ளதா? என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க நயினார், அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், அமித்ஷா போன்றவர்கள் இல்லையா? அவர்கள் எல்லாம் முடியாதது, தன்னை செய்ய சென்னார்கள் என்று சொல்கிறார்.

டிடிவி தினகரன் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆனால் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது குறித்து என்றைக்காவது பத்திரிகையாளர்களிடம் பேசி இருக்கிறாரா? கொடநாட்டில் கொலை நடைபெற்று எவ்வளவு நாட்கள் ஆகிறது. இப்போது பேச வேண்டியதன் அவசியம் என்ன வந்தது? முக்கிய முன்னாள் அமைச்சர்கள் குறித்த ஆவணங்கள் எல்லாம் கொடநாட்டில் இருந்தது. அவற்றை எல்லாம் நான் தான் படித்துவிட்டு அழித்தேன் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். அரசியலில் நேர்மையான நபர் என்றால் அவற்றை, அம்பலப்படுத்தி இருக்க வேண்டும் அல்லவா? ஒரு சிலரது நோக்கம் பிளவுபட்ட அதிமுகவை வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்ந்த பிறகு அதை கைப்பற்ற வேண்டும். அதுதான் அவர்களுடைய அரசியல் பார்வை. 2026ல் மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். வாக்குகளை வாங்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம் கிடையாது. தற்போது இருக்கும் அதிமுக தோற்ற உடன் அதை கைப்பற்ற வேண்டும்.  அதைநோக்கி தான் இவர்கள் எல்லாம் பயணிக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் இன்றைய தேதிக்கு இரட்டை இலை சின்னம், தொண்டர்கள் ஆகியவற்றை தவிர வேறு எதுவும் கிடையாது. அதை எடுக்க அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

பாஜக நாடு முழுவதும் எதாவது ஒரு கட்சியை சேர்த்து வைத்திருக்கிறதா? சிவசேனா கண் எதிரே நிற்கிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி போன்ற நபர்களை அழைத்து வந்தார்கள். இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை கொண்ட கட்சி பாஜக.  அப்படியான கட்சி உங்களை டெல்லிக்கு கூப்பிடுகிறது. அவர்கள் என்னை கட்சியை ஒன்றிணைக்க சொன்னதால் இப்படி செய்தேன் என்கிறார். அரசியலில் சூப்பர் சீனியரான செங்கோட்டையன், பாஜக கூப்பிடுகிறபோது சொந்த அனுபவம் எங்கே போனது? அதிமுக உட்கட்சி விவகாரங்கள் அனைத்தும் அதிமுகவுக்குள்ளே முடிவு செய்யப்பட வேண்டும். அதை முடிவு செய்கிற இடத்தில் நான் நிற்பேன் என்று அல்லவா? செங்கோட்டையன் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அமித்ஷா கூப்பிட்டார். நட்டா கூப்பிட்டார் என்று போனால் இப்படிதான் நடக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு இது கடினமான நேரமாகும். இந்த பிரச்சினை பெரியதாகி, இதில் யார் பெரிய ஆளாக வருகிறார்களோ, அவர்கள் அதிமுக தலைமை உறுதி செய்திட வேண்டும். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக வந்தால் என்ன செய்வார்கள்?

ஆர்.பி.உதயகுமார், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்கிறார். பாஜக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் உதயகுமார், எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சிக்கு பக்க பலமாக இல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் அது குறித்து பேச இல்லை. அவர்கள் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள். அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவது தொடர்ந்தால், பாஜகவுக்கு இருக்கும் 4 எம்எல்ஏக்களும் இல்லாமல் போய்விடுவார்கள். பாஜக உறவாடி கெடுப்பது போல, அதிமுக தொண்டர்களும் உறவாடி கெடுக்க நினைத்துவிட்டால் என்னவாகும்? அதிமுக தொண்டர்களுக்கு ஒரே பிரச்சினை கட்சி வெற்றி பெறுமா? இல்லையா? என்பதுதான். அதைவிட்டு தலைவர்கள் மத்தியில் நடக்கும் பிரச்சினை அவர்களுக்கு ஒரு பொருட்டு கிடையாது. அதிமுகவில் நடைபெறும் பிரச்சினைகளை தொண்டர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ