Homeசெய்திகள்கட்டுரைகாமராஜர், எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிடுவதா? காங்கிரஸ் மற்றும் ஊடகங்கள் மீது பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கடும்...

காமராஜர், எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிடுவதா? காங்கிரஸ் மற்றும் ஊடகங்கள் மீது பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கடும் சாடல்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவேகா) தலைவரும், தமிழக முதல்வருமான விஜயை பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசுவது கலாச்சார சீர்கேடு என்றும், இது போன்ற போலி பிம்பங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.காமராஜர், எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிடுவதா? காங்கிரஸ் மற்றும் ஊடகங்கள் மீது பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கடும் சாடல்!

​தற்போதைய அரசியல் மற்றும் ஊடகங்களின் போக்கு குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

we-r-hiring

​தூய்மையான ஆட்சியா?
​”காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தூய்மையான ஆட்சியை விஜய் கொடுத்து வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட ஒருசில குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதைக் கேட்டு நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை” என்று கோட்டீஸ்வரன் சாடினார்.

​அவர் மேலும் பேசுகையில், “ஐயா காமராஜரின் உயரம் என்ன? அவரது எளிமை என்ன? நேர்மை என்ன? சொந்த தாய்க்குக்கூடப் பொதுக் குழாயில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று சட்டம் பேசிய தவ வாழ்க்கை வாழ்ந்தவர் காமராஜர். 10 பைசா கூடத் தன் வாழ்நாளில் ஊழல் செய்யாத படிக்காத மேதை அவர். தங்களின் சுய லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் காமராஜரின் வரலாற்றுடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிடுவது எவ்வளவு பெரிய மோசமான வேலை? தூக்கத்தில்கூட நான்தான் காமராஜர், நான்தான் எம்.ஜி.ஆர் என்ற எண்ணம் வரக்கூடாது. காமராஜர் என்றால் சுய ஒழுக்கம், கம்பீரம், ஆளுமை. எதோடு எதை ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.காமராஜர், எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிடுவதா? காங்கிரஸ் மற்றும் ஊடகங்கள் மீது பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கடும் சாடல்!

​60 நாட்களிலேயே ஊழல் குற்றச்சாட்டா?
​திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் வந்த இந்த ஆட்சியில், 60 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அறநிலையத்துறை சொத்து விவகாரத்தில் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

​”மாற்றம் வந்துவிட்டது, ஊழலே இல்லை என்று பிரச்சாரம் செய்துவிட்டு, தற்போது தவறு நடந்ததும் அதிகாரியை சஸ்பெண்ட் செய்கிறார்கள். லஞ்சம் வாங்கிய சொந்த கட்சி நிர்வாகிகளே கைது செய்யப்படும் சூழல் உள்ளது. ‘தொட்டவனை விடமாட்டேன்’ என்று கூறிவிட்டு, ஊழல் பின்னணி உள்ளவர்களையும், மாற்றுக்கட்சியினரையும் எவ்வித பரிசீலனையும் இன்றி கட்சியில் இணைப்பது ஏன்? தற்போதைய அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் எனப் பல குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. தப்பு செய்துவிட்டு அதை மறைக்க ‘முட்டு’ கொடுக்கும் வேலைகள்தான் நடக்கின்றன” என்றார்.காமராஜர், எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிடுவதா? காங்கிரஸ் மற்றும் ஊடகங்கள் மீது பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கடும் சாடல்!​ஊடகங்களின் ‘ஜால்ரா’ கலாச்சாரம்
​தற்போதைய ஊடகங்களின் செயல்பாடுகள் முற்றிலும் தரம் தாழ்ந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், “பத்திரிகையாளர்களின் வேலை என்ன? மக்களிடம் சென்று குடிநீர் வருகிறதா, மின்சாரம் இருக்கிறதா, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்புவதுதான். அதை விடுத்து, முதல்வர் கோட் சூட் போட்டு வந்தார், டிபன் பாக்ஸ் எடுத்துச் சாப்பிட்டார், அதிகாரிகளைப் பார்த்து டாட்டா காட்டினார், அரசு ஊழியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் என இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பாணியில் செய்திகளை வெளியிடுவது வேதனையளிக்கிறது.

​சினிமா பத்திரிகையாளர்கள் ஹீரோக்களுக்கு பில்டப் கொடுப்பதைப் போல, அரசியல் செய்திகளையும் பில்டப் செய்து வெளியிடும் நோய் தற்போதைய ஊடகங்களைத் தாக்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, ஆட்சி மாறியதும் தங்களின் சுயநலத்திற்காக ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதே பலரின் வேலையாக உள்ளது” என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

“அரசு நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இல்லை; மோசமடைந்து வருகிறது!” – தவெக அரசைச் சாடும் திராவிடர் கழக மதிமாறன் அதிரடி நேர்காணல்!

MUST READ