Homeசெய்திகள்கட்டுரை​தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? மேலும் 2 பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் குறி; விஜய் அரசு...

​தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? மேலும் 2 பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் குறி; விஜய் அரசு மீது மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மேலும் 2 மூத்த பத்திரிகையாளர்களைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதே நேரத்தில், பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளைத் தப்பவிட்டு, தங்களைக் கேள்வி கேட்டவர்களை விஜய் அரசு சிறையில் அடைத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.​தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? மேலும் 2 பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் குறி; விஜய் அரசு மீது மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!​இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

​100 கோடி நில மோசடி: கண் துடைப்பு சோதனையா?
​திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ய முயன்ற விவகாரத்தில், தற்போது ஆக்‌ஷன் எடுப்பது போலக் காட்டி மக்களைத் திசைதிருப்ப இன்று காலையில் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை (Ride) நடத்தியுள்ளனர். 10 Days ஆக இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிறகு, இப்போது சோதனை நடத்தி என்ன பயன்? இது முழுக்க முழுக்க ஒரு நாடகம்.

we-r-hiring

​இந்த வழக்கில் பத்திரப் பதிவின் போது முறைகேடாகக் கையெழுத்திட்ட சார்பதிவாளர் ஒரே நாளில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் சென்றுவிட்டார். நீதிமன்றத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், எல்லாம் தயாராக இருந்ததால் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆவணங்களைத் தயார் செய்த முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமல், இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்ட மூன்று பேரை இந்த அரசு சிறையில் அடைத்துள்ளது. முறைகேடு செய்தவர்கள் வெளியில் நடமாட, கேள்வி கேட்டவர்கள் சிறையில் இருக்கும் விந்தையான ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது.​தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? மேலும் 2 பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் குறி; விஜய் அரசு மீது மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

​ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கு: பத்திரிகையாளர்களுக்கு வலை!
​தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக தரப்பில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆட்கள் மூலம் டிவிேக எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 35 கோடி ரூபாய் வரை குதிரை பேரம் பேசப்பட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விஜயன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​நமக்குக் கிடைத்துள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி, பிரபல செய்திச் சேனல்களைச் சேர்ந்த மேலும் 3 மூத்த பத்திரிகையாளர்களைக் கைது செய்யத் தற்போதைய அரசு சுத்தி வளைத்து வருகிறது. இவர்களிடம் இருந்து போன்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் எவ்வளவு பணம் கைமாறியது என்பதற்கோ அல்லது சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கோ எந்தவொரு உருப்படியான ஆதாரமும் (Evidence) இதுவரை இந்த அரசிடம் இல்லை. எவ்வித ஆதாரமும் இல்லாமல், தங்களின் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் மாற்றுக்கட்சிக்குத் தாவிவிடக் கூடாது என்ற பயத்தில், அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கவே இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளைத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.​தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? மேலும் 2 பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் குறி; விஜய் அரசு மீது மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!​குளறுபடியில் தவெக இணையதளம்
​தவெக கட்சியின் நிர்வாக லட்சணம் எப்படி உள்ளது என்பதற்கு அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளமே (Website) சாட்சி. ஊத்தங்கரை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.வின் பெயர் இளையராஜா. ஆனால், கட்சியின் இணையதளத்தில் இன்னும் குமரவேல் என்ற பெயரே நீடிக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் வேட்புமனுத் தாக்கலின் போதே எவ்வித விழிப்புணர்வும் இன்றி, ஆள்மாறாட்டம் தெரியாமல் தலைமை கையெழுத்திட்டதன் விளைவே இது. தங்களின் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யார் என்றே தெரியாத நிலையில், அவர்கள் விலை போய்விடுவார்கள் என்ற அச்சத்தில் ஒட்டுமொத்தக் காவல்துறையையும் சுயநலத்திற்காக விஜய் அரசு பயன்படுத்தி வருகிறது. ​மக்களுக்கான சட்டம் ஒழுங்கு, முக்கிய நில மீட்பு போன்றவற்றில் எருமை மாடு போல மந்தமாகச் செயல்படும் இந்த அரசு, தங்களின் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் காவல்துறையை ஏவி விட்டு மிரட்டல் அரசியலை அரங்கேற்றி வருகிறது என மாரிதாஸ் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

MUST READ