spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஇஸ்ரேலை கதற விடும் ''ஃபட்டா 01''! சீனையே மாற்றிய கமேனியின் ''ரவுண்ட் 3'' அட்டாக்

இஸ்ரேலை கதற விடும் ”ஃபட்டா 01”! சீனையே மாற்றிய கமேனியின் ”ரவுண்ட் 3” அட்டாக்

-

- Advertisement -

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அண்மையில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கு ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

we-r-hiring

தங்கள் நாட்டின் மீது ஈரான் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேல் மீது இறக்கமே காட்ட வேண்டாம் என்று ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடுமை காட்டியுள்ளார். இஸ்ரேலின் அயர்ன்டோம், ஏரோ போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி எப்படி இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கின என்று கேள்வி எழும்பும். ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3-இன் படி இஸ்ரேலின் மீது ஃபட்டா 01 என்கிற ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ஈரானிய புரட்சி காவல் படை அறிவித்துள்ளது.  ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 என்பது, ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ கட்டளை அமைப்புகளின் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கிற விதமாக, இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் அந்நாட்டின் உட்கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் நடத்துகிற பதிலடி தாக்குதல் ஆகும். இந்த ஆபரேஷன் தொடங்கப்பட்டதற்கு காரணம் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் போர்க்கால ராணுவ தளபதி உள்ளிட்ட பல ராணுவ ஜெனரல்களும், அணு சக்தி விஞ்ஞானிகளும் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்பஹான் போன்ற அணு செறிவூட்டல் தலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ், ரெஹாவோத், ஹைபா போன்ற முக்கிய இஸ்ரேலிய நகரங்கள் பெருமளவிலான சேதத்தை சந்தித்தன. மின்நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், ராணுவ ஆராய்ச்சி நிலையங்கள் போன்றவை  பலத்த சேதம் அடைந்தன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஹைப்பர்சானிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்துவது இது முதன் முறை அல்ல. 2024ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேலுக்கு எதிரான ட்ரூ ப்ராமிஸ்-2 ஆபரேஷனின்போது ஈரான் ஏராளமான ஃபட்டா ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் என்பது, ஒலியின் வேகத்தை விட 5 மடங்கிற்கும் அதிக வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணையாகும். அதாவது ஒலியின் வேகத்தை விட 6,100 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களாக கருதப்படுகிற இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை, இடைமறிப்பது, டிராக் செய்வது போன்றது நடக்காத காரியமாகும்.

ஃபட்டா 01 ஹைப்பர்சானிக் ஏவுகணை என்பது, ஈரானிய ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிற ஹாசன் டெஹ்ரானி மொகடாமினுடைய 11வது நினைவு தினமான நவம்பர் 10, 2022 அன்று ஈரானின் புரட்சிகர காவல் படையின் வான்பிரிவு தலைவர் ஒரு அதிநவீன பாலிஸ்டிக் ரக ஏவுகணையை தயாரித்து முடித்திருப்பதாக அறிவித்தார். ஈரானின் முதல் ஹைப்பர்சானிக் ஏவுகணையான ஃபட்டா 01, முதன் முதலாக 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணைக்கு ஃபட்டா 01 என்று பெயரிட்டவர் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆவார். இஸ்ரேலின் மிகவும் மேம்படுத்தப்பட்ட வான்பாதுகாப்பு அமைப்புகளான அயர்ன்டோம், ஏரோ போன்றவற்றை கூட கடந்து செல்லும் விதமாக ஃபட்டா 01 ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஃபட்டா 01 ஹைப்பர்சானிக் ஏவுகணை, இஸ்ரேல் ஸ்ட்ரைக்கர் என்று அழைக்கப்படுகிறது. 12 மீ. நீளம் கொண்ட இந்த ஏவுகணை, 1400 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. 200 கிலோ எடையிலான வெடிபொருட்களை இந்த ஏவுகணையில் ஏற்றிச் சென்றிட முடியும். வான்பாதுகாப்பு அமைப்புகளினுடைய இடைமறிப்பை தடுக்கவும், அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும் ஃபட்டா 01 ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தான் செல்லும் திசையையே மாற்றிக்கொள்கிற திறனுடையதாகும். மிகவும் தந்திரமாக தனது போக்கை மாற்றி, வான்பாதுகாப்பு அமைப்புகளின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வல்லமை படைத்தவை இந்த ஃபட்டா 01 ஏவுகணை.

ஃபட்டா 01 ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஆனாலும் சீனா, ரஷ்யா, வடகொரியாவின் தொழில்நுட்பங்கள்  இதில் தென்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இஸ்ரேலின் அயர்ன்டோம், ஆரோ போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்கு, ஃபட்டா 01 ஏவுகணைகள் மிகப்பெரிய சவாலாக திகழ்கின்றன. அயர்ன்டோம், குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை சிறப்பாக தாக்கி அழிக்கும் திறனுடையது. ஆனால் ஹைப்பர்சானிக் வேகம், கணிக்க முடியாத போக்கு ஆகியவை, வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவால் நிறைந்ததாகும். 2024 தாக்குதலின்போது இஸ்ரேல் மீது 7 ஃபட்டா 01 ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. அவற்றில் சில, இஸ்ரேலின் விமான தளத்தை குறிவைத்தன. பல ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்ததாக சொன்னாலும், அவர்களின் வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி ஃபட்டா 01 ஏவுகணைகளால் உள்ளே நுழைய முடிந்தது என்பதுதான் உண்மையாகும். இந்த தாக்குதல் வெற்றிகரமாக அமைய ஈரானின் தந்திரமும் ஒரு காரணமாகும். ஈரான் முதலில் டிரோன்கள், அதன் பிறகு வழக்கமான ஏவுகணைகளை வீசி அயன்டோம் போன்ற வான்பாதுகாப்பு அமைப்புகளை திசை திருப்பும். அதன் பிறகு ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் ஏவப்படும்.

அணு ஆயுத சர்ச்சைகள் காரணமாக ஈரான் மீது பல ஆண்டுகளாக, பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்த போதும், ஈரான் தன்னுடைய ராணுவ தொழில்நுட்பத்தை வலுப்படுத்த முடிந்துள்ளது. ஃபட்டா 01 ஹைப்பர்சானிக் ஏவுகணைகளால் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இன்றியே, தன்னுடைய இலக்கை தாக்க முடியும். ஈரானின் புரட்சிகர காவல்படையை பொறுத்தவரை ஃபட்டா 01 ஏவுகணை தாக்குதல், ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஃபட்டா 01 ஏவுகணைகளை அறிமுகம் செய்த 4 மாதங்களுக்கு பின்னர் ஃபட்டா 02 ஏவுகணைகளையும் அறிமுகப்படுத்தியது. இதனுடைய வரம்பு மணிக்கு 1,500 கி.மீ ஆகும். இது ஒரு கப்பல் ஏவுகணையாகும். ஈரான் தன்னுடைய ஏவுகணை அமைப்புகளை 4 பிரிவுகளாக வகுத்துள்ளது. ராக்கெட்டுகள், கப்பல் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள். இதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிஸ்டங்களும் உள்ளன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பங்களும் உள்ளன. சில ஏவுகணைகள் தரையில் இருந்து ஏவுகிற விதமாகவும், மற்றவை கடலில் இருந்து கடலில் உள்ள இலக்கை நோக்கியும், அல்லது கடலில் இருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கியும் ஏவக் கூடியதாகும். ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணை அமைப்புகள் அதிகபட்சமாக 2,000 கி.மீ முதல் 2,500 கி.மீ தொலைவு வரை பயணிக்கும் திறன் வாய்ந்தவையாகும். இந்த வரம்பு ஈரான் உச்ச தலைவர் கமேனியின் அறிவுறுத்தலின் பேரில் உருவாக்கப்பட்டதாகும்.

ஜுன் 13ஆம் தேதி அன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடங்கியது முதல் போர்ச்சூழல் உருவாகிய பின்னர் இரு நாடுகளும் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்துள்ளன. இரு தரப்பிலும் கணிசமான அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஃபட்டா 01 ஏவுகணைகளை தாண்டி, இஸ்ரேலுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது செஜ்ஜில் ஏவுகணைகளாகும். 2000 கி.மீ தொலைவுக்கு பாய்ந்து செல்லும் திறன் கொண்டவை இந்த செஜ்ஜில் ஏவுகணைகளாகும். ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவுக்குள் தாக்குதல் நடத்தும் அளவுக்கு திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணை 59 அடி நீளம் கொண்டதாகும். தோராயமாக 700 கிலோ எடையிலான வெடி பொருட்களை ஏந்திச் செல்ல முடியும். ஃபட்டா 01 ஏவுகணையை போலவே, இஸ்ரேலின் அயர்ன்டோம், ஏரோ போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ளாக ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாகும்.  இது ஒரு கேம் சேஞ்சராக பார்க்கப்படுகிறது.

MUST READ