spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஐவர் குழு...டிசம்பர் 31 பைனல்! ஸ்டாலின் கொடுத்த வார்னிங்! டெல்லிக்கு போன மெசேஜ்!

ஐவர் குழு…டிசம்பர் 31 பைனல்! ஸ்டாலின் கொடுத்த வார்னிங்! டெல்லிக்கு போன மெசேஜ்!

-

- Advertisement -

திமுக வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. சமீபநாட்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து சில அபஸ்வர குரல்கள் எழும்பிய நிலையில், அதனை அடக்கும் விதமாகவே இந்த குழுவை அமைக்கப்பட்ட கட்டாயத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. மோடி – பாஜகவை எதிர்க்கும் இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலிமையாக இருக்கிறது. தொடர் வெற்றிகளை சந்திக்கும் கூட்டணியாகவும் அது இருக்கிறது.

சமீப நாட்களாக திமுக மீது காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கு ஏதோ கோபம். அவர்கள் காங்கிரசை உயர்த்திப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு திமுகவை அவமதிக்கும் விதமாக பேச தொடங்கிவிட்டனர். விஜய் ஆட்சியில் பங்கு என்று சொல்கிறபோது, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிகாரத்தில் பங்கு கேட்போம் என்று சொன்னார்கள். காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று அதிக இடங்களை கேட்போம். அதிகாரத்தில் பங்கு என்று பேசி வந்தார்கள். ஒருவேளை திமுக ஆட்சியில் பங்கு தராவிட்டால் விஜயுடன் கூட்டணிக்கு செல்வது, அப்படி சென்றால் கன்னியாகுமரி, கேரளாவில் காங்கிரசுக்கு பலன் தரும் என்றெல்லாம் பேசினார்கள்.

காங்கிரஸ் – தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பான வதந்திகள் திமுக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை, டெல்லியில் காங்கிரஸ் தலைமையை தொடர்புகொண்டு பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியது. இதனால் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இதுபோன்ற பேச்சுக்கள் வரக்கூடாது என்பதற்காகவும், திமுக கூட்டணி உறுதியாக உள்ளது என்பதை சொல்வதற்காகவும் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி இன்னும் பலமாகி இருக்கிறது. பீகாரை போன்ற பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், ஒற்றுமையாக இருந்தால் தான் எதிரணியை வீழ்த்த முடியும் என்பதிலும் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இத்தகைய சூழலில் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்று தகவல் பரவினால் அது சரியாக இருக்காது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைமை கேட்டுக்கொண்டதால் காஙகிரஸ் மேலிடம் இந்த குழுவை அமைத்துள்ளது.

திமுக தலைமையை பொருத்தவரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தேமுதிகவை பொருத்தவரை திமுக உடன் கூட்டணி அமைக்கிற சூழல் தான் இருக்கிறது. எனவே டிசம்பர் 31க்குள் அனைத்துக் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்வதிலும் திமுக தலைமை உறுதியாக உள்ளது. அதன்படி முதற்கட்டமாக காங்கிரசிடம் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்துவிட்டு வாருங்கள். பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம் என்று திமுக தலைமை சொல்லிவிட்டது. அதன் முதற்கட்டமாக தான் தற்போது பேச்சுவார்த்தைக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியுடன் நெருங்கிய நட்புடன் இருந்து வருகிறார். கடந்த 3 தேர்தல்களாக திமுக கூட்டணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதேநேரம் வாக்கு சதவீதம் என்ன என்றே தெரியாத விஜயுடன் கூட்டணி வைக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். விஜயுடன் வாக்கு வங்கி என்ன என்று தெரியவந்தால், 2029 தேர்தலில் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிப்பார்கள். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி தங்களை வளர்த்துக்கொள்ளாமல் தேர்தலுக்கு தேர்தல் கூடுதல் இடங்களை கேட்டால் எப்படி வழங்குவார்கள்?

ஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் –காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது

காங்கிரஸ் இருப்பதால் திமுகவுக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக 100 இடங்களுக்கு மேல் அவர்களுக்கு வழங்க வாய்ப்புகளே கிடையாது. தொகுதி பங்கீட்டில் கடந்த 3 முறையும் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. இம்முறை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் 35 இடங்கள் கேட்டால், 25 முதல் 26 இடங்கள் வரை வழங்கலாம். அதற்கு மேல் சாத்தியம் கிடையாது. காங்கிரஸ் மேலிடத்திற்கு விஜயுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் கிடையாது. திமுகவை பிடிக்காதவர்கள், கன்னியாகுமரியில் சிறிஸ்தவ மீனவர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்று நினைப்பவர்கள், திருச்சி வேலுசாமி போன்றவர்கள் செய்கிற வேலைதான் இது. காங்கிரஸ் தலைமை திமுக உடன்தான் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. எனவே விஜயை காண்பித்து காங்கிரஸ் பேர வலிமையை கூட்டிக்கொள்ள முடியாது.

திமுகவை பொறுத்தவரை, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறார்கள். பீகாரில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்த 15 நாட்களுக்குள்ளாக சட்டமன்றத் தேர்தலை அறிவித்தனர். மேலும் பாஜக கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடும் விரைந்து நடைபெற்றன. அதேபோல், தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் வந்த உடன் தேர்தலை அறிவித்துவிட வேண்டும். திமுகவுக்கு பிரச்சாரத்திற்கு அதிக நேரம் வழங்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. அதிக நாட்கள் பிரச்சாரத்திற்கு கொடுத்தால் திமுக கூட்டணிக்கு ஆதாயம் இருக்கும் என்று நினைக்கிறார்கள். எனவே மார்ச்சுக்குள் தேர்தல் நடத்த திட்டமிடுவார்கள். அதேவேளையில், மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே மே மாதத்திற்கு முன்னதாகவே சட்டமன்றத் தேர்தலை நடத்த முயற்சிப்பார்கள். அதேநேரத்தில் பாஜக எப்படி வேண்டுமானாலும் தேர்தலை நடத்தும் என்பதால் டிசம்பர் 31க்கு உள்ளாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ