Homeசெய்திகள்கட்டுரைமதுரை ஆதீனம் கார் விபத்து! கேஸ் கோர்ட்டில் நிக்காது! உடைத்துப் பேசும் சுகி சிவம்!

மதுரை ஆதீனம் கார் விபத்து! கேஸ் கோர்ட்டில் நிக்காது! உடைத்துப் பேசும் சுகி சிவம்!

-

- Advertisement -

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் ஆளுநர்களின் அதிகாரத்தை தமிழ்நாடுதான் நிர்ணயித்தது என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு 4வது ஆண்டை நிறைவு செய்துள்ளதை ஒட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற சாதனை விளக்கக்கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எவ்வளவோ பிரச்சினைகள் வரும். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை ஒரு விஷயமாக வராது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்து மதம்,  இந்து மத பாதுகாப்பு என்கிற போர்வையில் இந்து சமய அறநிலையத்துறையை பிரச்சினையாக ஆக்கிய காலத்தில், இதை சமாளிக்க ஒரே நபர் சேகர்பாபுதான் என்று முதல்வரின் நம்பிக்கையை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தில் சென்று முதல்வர் ஒரு உத்தரவு வாங்கினார் பாருங்கள், அன்றைக்கே ஆளுநருக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? அவர் கையெழுத்து போட்டாலும் ஒன்றுதான் போடாவிட்டாலும் ஒன்றுதான்.நீங்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பதற்கு ஒரு தாளில் உத்தரவு வாங்கியவர் முதல்வர். மானம் என்ற ஒன்று இருந்தால், அவர்களுக்கு அவமானம் என்பது புரியும். அது மட்டுமின்றி அந்த உத்தரவை சுற்றறிக்கையாக அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் அனுப்புங்கள் என்று சொன்னார்கள். இவ்வளவு தான் உங்கள் அதிகாரம் என்று தெரிந்துகொள்ளுங்கள் என்பதற்காக நாடு முழுவதும் ஆளுநர்களின் அதிகாரத்தை தமிழ்நாடுதான் நிர்ணயித்தது.

50 ஆண்டுகளாக சமய உலகத்தில் நான் பயணித்துக்கொண்டிருப்பவன். கடந்த 4 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரச்சினையை வைத்து ஒரு குறிப்பிட்ட கூட்டம் அரசியல் செய்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட மடத்தை இந்து மத்தின் தலைமைப்பீடமாக அறிவிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் ஒரு கல்லூரியில் 10 துறைகளில் 10 பேராசிரியர்கள் இருப்பது போல அவரையும் ஒரு மடாதிபதியாக மட்டுமே ஒத்துக்கொள்வேமே தவிர  அவரை இந்து மத்தின் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று  அறிவித்தவர்கள் உலகத்ததில் உண்டு. தவத்திரு குன்றக்குடிகள் அடிகளார் பாசறையில் 50 ஆண்டுகள் பயணித்தவன் நான். தவத்திரு அடிகளார் இந்த சமயத்தை ஒழுங்குபடுத்த எத்தனை முயற்சிகள் எடுத்தார் என்று பலருக்கும் தெரியாது.

ஒருமுறை கலைஞர், குன்றக்குடி அடிகளாரை அழைத்து ஒரு வார்த்தை சொன்னார். எங்களுக்கு எதற்கு கெட்ட பெயர். எப்போ பார்த்தாலும் கோவில்களில் எல்லாம் அரசாங்கம் வந்து உட்கார்ந்து கொள்கிறார்களே என்று சொல்கிறார்கள். அதை ஏதாவது மாற்றலாமே. சமய அறநிலையத்துறையை வேறு எப்படி மாற்றி கொடுப்பதாக இருந்தால் மாற்றிக் கொடுத்து விடலாம். எனக்கு ஒன்றும் அது வேண்டும் என்பது கிடையாது. கொஞ்சம் யோசியுங்கள் என்று சொன்னார். அதனை ஏற்று, அப்போது மேலவை உறுப்பினராக இருந்த குன்றக்குடி அடிகளார், ஒரு வரைவை தயார் செய்தார். ஒவ்வொரு கோவிலிலும் சிறிய கூட்டுறவு சொசைட்டி போன்று ஒரு அமைப்பு ஏற்படுத்துவது. அதற்கு செயற்குழு, பொதுக்குழு  தேர்ந்தெடுக்கப்படும்.  பக்தர்களால் ஆன பொதுக்குழு, பொதுக்குழுவால் ஆன செயற்குழு. செயற்குழுவிற்கு ஒரு தலைவர். இப்படியான கூட்டுறவு சொசைட்டியை ஏற்படுத்தி அவர்கள் கோவிலை நிர்வாகம் செய்வார்கள். அரசு கணக்கு வழக்குகளை மட்டும் பார்த்துக்கொள்ளும். இதுபோன்ற திட்டத்தை கலைஞரிடம் கொண்டுபோய் கொடுத்தார்.

அப்போது கலைஞர் அடிகளாரிடம் சொன்னார். உங்கள் மடாதிபதிகளிடம் எல்லாம் கேளுங்கள். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் என்றால் ஒத்துபோவொம். இதை வைத்துக் கொண்டு நான் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று சொன்னார். நீங்கள் நம்பவே மாட்டீர்கள். இந்த வரைவை எடுத்துக்கொண்டு அப்போதைய அறநிலையத்துறை துணை ஆணையர் அர்ஜுனன் என்பவர் ஒவ்வொரு சாமியாரிடமும் சென்று படித்துக்காட்டினார். அந்த குறிப்பிட்ட மடத்தில் அப்போது, பட்டத்தில் இருந்தவரிடம் சென்று இதை படித்துகாட்டினார். அறநிலையத்துறையை மாற்றிவிட்டு மக்களிடம் கொடுத்துவிடனும் என்று தலைவர் விருப்பப்படுகிறார். இதுபோன்ற ஒரு யோசனையை சொல்கிறார் என்று.

வெளியில் வந்தால் அரசு கோவிலை விட்டு போக வேண்டும் என்று மாநாட்டில் பேசும் அவர், துணை ஆணையர் அர்ஜுனன் படித்துக்காட்டியதும் சொல்கிறார். “எதற்காக பேசாமல் அரசாங்கத்திடமே இருக்கட்டும். வேண்டுமானால் ஒரு போனில் காரியத்தை பேசிக் கொள்ளலாம். இல்லா விட்டால் ஒவ்வொரு சாதிக்கார்களும் ஒரு கோவிலை பிடித்துக் கொள்வார்கள். பிறகு ஒவ்வொரு சாதிக்காரனின் கால்களிலும் போய் நான் விழ வேண்டும்”. வெளியில் இந்த கோவில்கள் பொதுவாக வேண்டும் என்று பேசுகிற மடாதிபதிகள், உள்ளுக்குள் வஞ்சனையாக தேவையில்லை என்கிற என்னத்தோடு இருந்தார்கள். கலைஞர் இதற்கு ஆசைப்படவில்லை. வேண்டுமென்றால் கேளுங்கள் கொடுத்து விடுகிறேன் என்றார். அடிகளார் உடன் இருந்ததால் எனக்கு தெரியும்.

உண்மையாகவே இன்னும் சுதந்திரமாக செயல்பட, ஒருசிலர் இந்து சமய அறநிலையத் துறையை அனுமதித்து இருந்தால் இந்நேரம் 50 கல்லூரிகளாவது தமிழ்நாட்டில் வந்திருக்கும்.  50 மருத்துவமனைகளாவது வந்திருக்கும். உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற திமுக அரசின் சித்தாந்தத்தை வழிமுறைப் படுத்துவதற்காக முயற்சி செய்தபோது எல்லாம் நீதிமன்றங்களுக்குள் ஒழிந்துகொண்டு செயல்படவிடாதபடி தடுத்துக்கொண்டு இந்துசமய அறநிலையத் துறையை தொல்லை செய்தவர்கள் பல பேர். அதை சமாளிப்பது சுலபம் அல்ல. அவர்களுடைய ஒரே நோக்கம்  ஒன்றுதான். கடவுளுக்கு போடப்படுகிற காசு முழுவதும் ஒரு கூட்டத்திற்கு மட்டுமே போக வேண்டுமே ஒழிய, அதை தவிர நாட்டு மக்களுக்கு போகக்கூடாது. இதைத்தாண்டி இத்தனை நல்ல விஷயங்கள் செய்ய முடிந்திருக்கிறது என்றால் மக்கள் யோசித்து பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு மட்டும் எத்தனை பேர் வயிற்றில் புளியை கரைத்தது  தெரியுமா?  அந்த புளி இருந்தால் 50 கல்யாணத்திற்கு ரசம் வைக்கலாம். அதற்கு போட்டியாக மதுரையில் முருகன் மாநாடு நடத்தப் போகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் திருப்பரங்குன்றம், மதுரையை எய்ம் பண்ணுகிறார்கள். அதனால் அந்த இடத்தில் நடத்துகிறார்கள். விபத்து ஏற்படுத்தி ஒருவரை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் என்றால், விபத்தை ஏற்படுத்துகிற காருக்கும், விபத்துக்குள்ளாகும் காருக்கும் ஒரு தொழில்நுட்ப விஷயம் உள்ளது. யார் வந்து மோதுகிறார்களோ அவர்களின் கார் பெரிதாக இருக்க வேண்டும். அடிபடுகிற கார் சிறியதாக இருக்க வேண்டும். பெரிய கார் சின்ன காரின் மீது மோதினால்தான் ஏதாவது நடக்கும். ஆனால் மாருதி சுசுகி மோதி, பார்ச்சுனா காருக்கு எதாவது நடக்குமா? நான் சட்டம் படித்ததால் சொல்கிறேன். இந்த கேஸ் நீதிமன்றத்தில் நிற்காது. அப்படி நீங்கள் செய்வதாக இருந்தால் சரியான ஆளிடம் கேட்டு செய்யுங்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ