spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎம்.பி ஆகிறார் சௌமியா? நாடகம் போடும் தந்தை - மகன்! இயக்குவது அமித்ஷா!

எம்.பி ஆகிறார் சௌமியா? நாடகம் போடும் தந்தை – மகன்! இயக்குவது அமித்ஷா!

-

- Advertisement -

அதிமுகவிடம் உள்ள மாநிலங்களை சீட்டுகளில் ஒன்று சௌமியா அன்புமணிக்கு வழங்க பேச்சுவார்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாமகவில் தந்தை – மகன் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்தும், அதிமுகவின் ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர் தேர்வு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்றைக்கு தலைவர் அமித்ஷா தான். ராமதாஸ் தலைவர் இல்லை என்று அன்புமணி சொல்கிறார். அன்புமணி தலைவர் இல்லை என்று மருத்துவர் ராமதாஸ் சொல்கிறார். அமித்ஷா தான் தற்போது பாமகவை இயக்கிக் கொண்டிருக்கிறார். முன்பு அதற்கான ஏஜெண்டாக அண்ணாமலை இருந்தார். தற்போது அண்ணாமலை நீக்கப்பட்டு விட்டதால், அமித்ஷா நேரடியாக கவனித்து வருகிறார். பாஜக நினைத்தது தற்போது நடந்துவிட்டது. மகாராஷ்டிராவில் முதலமைச்சராக அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் சரத்பவார். அவரது கட்சியையே உடைத்து, அவரது மருமகனை தனியாக அழைத்து சென்றுவிட்டனர். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது.

தனியார் தொலைக்காட்சியில் யார் மனசில் யார் என்று ஒரு நிகழ்ச்சி வரும். அதுபோல தான் பாமகவை தூக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போடுகிறது. அதன் தலைவர் யார் என்று பார்க்கிறபோது, மருத்துவர் ராமதாஸ். அவரது கொள்கைகள் பாஜகவுக்கு எதிரானது. அவர் ஜாதிக்கட்சி வைத்திருந்தாலும் தமிழர்களுக்கு சாதகமான போக்கை உடையவர். அவர் யாருக்கு பயப்படுவார் என்றால் அவரது பையன் அன்புமணிக்கு தான். அன்புமணிக்கு, ஏதாவது கொள்கை உள்ளதா? என்றால் எதுவும் கிடையாது. அவரை தூக்கலாமா? என்கிறபோது அவர் பெரிய அளவில் பணம் கேட்பார். அப்பாவிடம் பர்மிஷன் கேட்க வேண்டும் என்பார். சரி பையன் யார் சொன்னால் கேட்பார் என்றால், அவரது மனைவி சௌமியா சொன்னால் கேட்பார். அப்போது சௌமியாவை தூக்கு என்கிறார்கள். இந்த கணக்கின்படி தான் அவர்கள் உள்ளே வருகிறார்கள்.

பழைய அரசியல் என்றால் பாமகவின் தலைவரான ராமதாசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தைலாபுரத்துக்கு சென்று நேரில் பேசுவார்கள். அல்லது அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால் பாஜகவின் கொள்ளைக்கார அரசியல் என்பது குடும்பத்திற்குள் நுழைந்து, சௌமியாவை தூக்குகிறார்கள். அவருக்கு பதவி ஆசை உள்ளது. அரசியலுக்கு வர வேண்டும். மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சௌமியாவை அழைத்து பேசுகிறார்கள். அப்போது நான் இந்தி கற்றுக்கொள்கிறேன். ஒன்று உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது பாமகவை உங்கள் கட்சியில் கொண்டுவந்து சேர்ப்பது போன்று செய்கிறேன் என்கிறார். மேலும் அன்புமணி, ராமதாசுக்காகவா இவ்வளவு பயப்படுகிறீர்கள் என்று அமித் ஷாவிடம் கேட்டுள்ளார். இது நானாக சொல்லவில்லை. ராமதாஸ் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார்.

ராமதாசின் காலைப் பிடித்துக்கொண்டு மகனும், மருமகளும் அரைமணி நேரம் அழுதுள்ளனர். பின்னர் ஒரு சேட்டின் ஃபோட்டோவை காட்டி, இவர் உங்களை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார் என கடைசியில் சொல்லி உள்ளனர். காலையில் ராமதாஸ் வீட்டில் எழுந்து பார்த்தபோது அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் அவரை காரில் கடத்திச்சென்று பிரதமர் மோடியை சந்திக்க வைத்தனர். அங்கே மோடியுடன் புகைப்படங்களை எடுக்கிறார்கள். ஆனாலும் அவருடைய மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமதாஸ் குடும்பத்தை மோடி கட்டிப்பிடித்தார். மொத்தமும் காலியாகிவிட்டது. தற்போது தலையில்லா முண்டமாக பாமக செயல்பட்டு வருகிறது. தற்போது பாமக சௌ என்று ஒரு பிரிவு தொடங்க உள்ளனர். பாட்டாளி மக்கள் பாரதியா ஜனதா கட்சி என்று ஒன்றை தொடங்க உள்ளனர். இந்த பெயரில் கட்சியின் பெயரை பதிவு செய்யலாம் என்று இருக்கிறார்கள். பாமக மருத்துவர் ராமதாசிடமே இருக்கும். பாமகவின் சட்டவிதிகளில், மருத்துவர் ராமதாசை மாற்றவே முடியாது என்று உள்ளது.

ramadoss

அன்புமணி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவன் நான். என்னை மாற்ற முடியாது என்று அன்புமணி சொல்கிறார். மற்ற கட்சிகளில் தலைவர், பொதுச் செயலாளர் என்று தான் இருப்பார்கள். ஆனால் கட்சிக்கு கடவுள் என்ற ஒன்று உள்ளதா? எங்கள் கட்சியின் தலைவர் இவர் தான். எங்கள் கட்சியின் கடவுள் இவர்தான் என்று 2 கட்சிகளுக்கு தான் உள்ளது. ஒன்று பாஜகவுக்கு மோடி. பாமக வன்னிய மக்களின் கடவுள் ராமதாஸ். மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் பாமகவின் எதிர்கால தலைவராக அன்புமணி இருப்பார் என்பதால் அவர் பின்னால் சென்றுள்ளனர். அவர் பின்னால் சென்றால் தான் பதவி கிடைக்கும். சாதாரண தொண்டர்கள் முழுவதும் மருத்துவர் ராமதாஸ் பின்னால்தான் உள்ளனர். இருவரது நோக்கமும் ஒன்றுதான். சீட்டும், பணமும். அதிகாரத்தை மட்டும் கொஞ்சநாள் மருத்துவர் ராமதாசிடம் கொடுத்தால் என்ன தவறு? அன்புமணி தாயாரை பாட்டிலை வீசி தாக்கி இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அவர் இருக்கும் திசையை நோக்கி பாட்டிலை வீசி இருப்பார்.

தேர்தல் நெருங்க நெருங்க இருவரும் சேர்ந்துவிடுவார்கள். எப்படி என்றால் அன்புமணி பாஜகவை விரும்புகிறார். ராமதாஸ் அதிமுகவுடன் சேர வேண்டும் என்கிறார். ஆனால் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்துவிட்டதால் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகிவிட்டது. அப்போது அந்த கூட்டணியில் இருவரும் இணைந்துவிடுவார்கள். நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தனது சகோதரர் சுதீஷை, எடப்பாடி பழனிசாமியிடம் ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில், சௌமியா அன்புமணிக்கு, அதிமுகவில் எம்.பி. சீட் கொடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவில் உள்ள 2 சீட்டுகளில் ஒன்றை, அன்புமணிக்கு கூட வேண்டாம் சௌமியாவுக்கு வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டமன்றத் தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற பாமக வாக்குகள் மிகவும் அவசியமாகும். அதற்கு பதிலாக சௌமியாவுக்கு ஒரு இடம் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. மற்றொரு இடம் ஜெயக்குமாருக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சௌமியா போய்விட்டார் என்றால்? அந்த கூட்டணிக்கு போய்விடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ