spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், மற்ற இடங்களை தான் கூட்டணி கட்சிகளுக்கு வழங்க முடியும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திமுக சார்பில் பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், எத்தனை இடங்கள் என்பது நம்முடைய உழைப்பில் உள்ளதாக கூறியுள்ளார். என்னை பொருத்தவரையும் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கிறேன். 160 முதல் 170 இடங்கள் என்பது எளிதானது. ஆனால் 200 இடங்கள் என்கிறபோது மிக கடுமையாக உழைக்க வேண்டும்.  சிறிய சிறிய வாக்கு வங்கிகளை எல்லாம் திரட்டுகிறார்கள். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகு தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று முடிவு செய்ய வேண்டும். எந்த எந்த தொகுதிகள் என்று முடிவு செய்ய வேண்டி உள்ளது. இப்படி நீண்ட நடவடிக்கைகள் இருக்கிறபோது, காங்கிரஸ் கட்சி நாங்கள் முன்பாகவே குழு அமைத்துவிட்டோம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

we-r-hiring

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

தற்போது முதலமைச்சர் வேறு காங்கிரசுக்கு செக் வைத்துவிட்டார். நாங்கள் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. 200 இடங்கள் வராவிட்டாலும் தனி மெஜாரிட்டி நிச்சயம். எனவே வந்தால் வாங்க. வராவிட்டால் போங்க என்று மறைமுகமாக காங்கிரசுக்கு சொல்லிவிட்டார். காரணம் ஓபிஎஸ் அவரை அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிவிட்டார். பிறகு காங்கிரஸ் என்ன சொல்ல வேண்டும்? அடிப்படையில் வெற்றி பிம்பத்தை கட்டமைக்க வேண்டும். அப்படி வெற்றி பிம்பத்தை முதலமைச்சர் கட்டமைத்து கொண்டு போய் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் பாராட்டு என்பது எல்லோரும் பாராட்டியது போன்றது தான். அதுபோக 170 – 180 இடங்களில் நின்றாக வேண்டும். தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிக இடங்களில் போட்டியிட்டாக வேண்டும். ஸ்டாலின் அதில் தெளிவாக உள்ளார். 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்கும் அவ்வளவுதான். அப்போது மிச்சமிருக்கும் தொகுதிகளை பிரித்துக்கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 22 தொகுதி. 6 சீட் இருக்கும் கட்சிகளுக்கு 6 சீட்டுதான். தேமுதிகவுக்கு 6 முதல் 5 தொகுதிகள் தான் கிடைக்கும். விசிகவுக்கு ஓரிடம் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் சிறிய கட்சிகள் உள்ளன.

தேர்தலில் போட்டியிடாத சின்ன கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. காரணம் அந்த கட்சியினர் உதய சூரியன் அல்லது இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டனர். அதேவேளையில் அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம். அதனால் 15 பேர் வரை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டி உள்ளது. இப்படியான வெற்றி பிம்பம் கட்டமைக்கப்பட்ட பிறகு யாராக இருந்தாலும் அதிகமான இடங்களில் தான் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவானது தான். ஆனால் வெற்றி வாய்ப்பு அதிகம். மதுரை உத்தங்குடியில் வாக்குச்சாவடி பயிற்சி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி புத்தகம், சாதனை விளக்க கையேடு என்று வீடு வீடாக பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் இன்னும் குழப்பம் உள்ளது. பிரதமர் மோடி வந்த ஒரு கூட்டத்தில் தான் கூட்டணி தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக மேடை ஏறினார்கள். பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள். அன்றைக்கு எடப்பாடியும், டிடிவியும் ஒரே மேடையில் ஏற வேண்டும். ஆனால் இருவரும் வேறு இடங்களில் பேசுகிறார்கள். அன்புமணி ஒரே முறை பேசினார். அதன் பிறகு அதிமுக நடத்திய கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் எல்லோரும் பொதுமேடைகளில் ஒன்றாகவே இருக்கிறார்கள். தற்போது இந்த மேடைகளில் பிரேமலதா சேரப் போகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். இன்றைக்கு விஜய் என்ன சொல்கிறாரோ? அதை 20 வருடங்களுக்கு முன்பு விஜய்காந்த் சொன்னார். 9 வருடங்களுக்கு முன்னதாக கமல் சொன்னார். கமல் 6 சதவீதம் வாக்குகளும், விஜயகாந்த் 8 சதவீதம் வாக்குகளையும் வாங்கினார்கள். விஜய் 12 சதவீதம் வாக்குகளை வாங்குவார். அதை தாண்டி அவருக்கு என்ன வாய்ப்பு உள்ளது? கிராமப்புற பகுதிகளில் எவ்வளவு வாக்குகள் வரும் என்று சர்வே எடுத்துப்பார்த்தால், எதுவும் வராது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே வேண்டாம் என்று நினைக்கிற, எப்போதும் எதிர்ப்பு மனநிலையில் உள்ள 20 சதவீதம் பேர் உள்ளனர். அதில் தற்போது சீமானுக்கும் வாக்கு வாங்கி உள்ளது. அதில் விஜயால் எவ்வளவு வாக்குகள் வாங்க முடியும்? அது நிர்வாகிகளுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அப்போது திமுக, அதிமுக கூட்டணியை தாண்டி வேறு வாய்ப்புகள் இல்லை. அதேநேரம் திமுக கூட்டணியில் ஒரு ஒருங்கிணைப்பு தெரிகிறது. அதிமுக கூட்டணியில் ஜெல் தெரியவில்லை.

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருக்கும் நிலையில், விஜய் ஊழல் மலிந்த அரசாக திமுக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அமலாக்கத்துறையை பொறுத்தவரை சட்டத்திற்கு புறம்பாக தான் செயல்படுகிறார்கள். அதை நாடு  முழுவதும் உதாரணம் காட்ட முடியும். அதிமுக வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு போகும். அப்போது உச்சநீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை குட்டு வாங்கும் என்றுதான் நினைக்கிறேன். ஒரு வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இறுதியானதாக எனக்கு தெரியவில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு போக செய்வார்கள். அதை புரிந்துகொள்ளாமல் விஜய் பேசுகிறார். எப்.ஐ.ஆர் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையின் பங்கு வரும். ஆனால் எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்று அமலாக்கத்துறை வருகிறது. இது இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான். தங்களுக்கு முகாந்திரம் இல்லாததால் எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்று வழக்கு தொடர்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ. ஆர் போட்ட பிறகும் அமலாக்கத்துறை வருவது இல்லை. ஆனால் திமுக அமைச்சர்கள் மீதான பழைய வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறது. விஜய் போன்றவர்கள் இந்த தாத்பரியத்தை புரிந்துகொள்ளாமல் உள்ளே வருகிறார்கள்.

இந்த வழக்கே அதிமுக முக்கிய பிரமுகர் போட்ட வழக்குதான். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். விஜய் மற்றும் அவரை சுற்றி இருப்பவர்கள், நிகழ்கால அரசியலில் அது எப்படி இயங்குகிறது என்று புரிந்துகொள்ளவில்லை. அமலாக்கத்துறைக்கு தமிழ்நாட்டில் நம்பகத் தன்மையே கிடையாது. வழக்கு தொடருவார்கள். ஆனால் விசாரிக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவால். மாநில அரசு காவல்துறை விசாரித்தால் மாநில அரசு மீது சந்தேகம் தெரிவித்து சிபிஐ விசாரணை கேட்டு விஜய் போனார். மத்திய போலிசார் மற்றும்  மத்திய விசாரணை அமைப்புகள் செய்தால் மத்திய அரசின் மீது சந்தேகம் வராதா? அவர் இரு விதமாக பேசுகிறார். ஆனால் இதுபோன்ற விஷயங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ