spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநிதி ஆயோக்கில் ஸ்டாலின் சம்பவம்! வாயடைத்து போன மோடி!

நிதி ஆயோக்கில் ஸ்டாலின் சம்பவம்! வாயடைத்து போன மோடி!

-

- Advertisement -

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் 50 சதவீதம் ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன் முதலாக குரல் எழுப்பியுள்ளார். இது மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மேற்கொண்ட டெல்லி பயணம் குறித்தும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்தும் ஆய்வாளர் கிருஷ்ணவேல் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- எடப்பாடியார் டெல்லிக்கு போனார் என்றால் சம்பந்தியை காப்பாற்ற போனார். ஒருவேளை ஸ்டாலினும் அவர் பையனை காப்பாற்றத் தான் போயிருப்பார்  போல என்று நினைக்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையை கடுமையான கண்டனத்தை தெரிவித்துவிட்டனர். ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறபோது,  நீங்கள் விசாரணைக்கு எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுவிட்டனர். கிட்டத்தட்ட 70 சதவீத வழக்குகள் முடிந்துவிட்டது.

திமுக ஆட்சியில் இருந்த காலத்தை விட ஆட்சியில் இல்லாத காலம்தான் அதிகம். மத்தியிலும் திமுகவுக்கு ஆதரவான ஆட்சி இருந்ததில்லை. இத்தனை வருடங்களில் ஊழல் ஊழல் என்கின்றனர். ஒரு வழக்காவது பதிவு செய்துள்ளனரா? ஆனால் ஜெயலலிதா டான்சி வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என்று அடுக்கடுக்காக வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுத்தனர். மத்திய அரசிடம் எவ்வளவு அதிகாரம் வைத்துக்கொண்டு எதனால் திமுகவில் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. நீங்கள் நினைத்தால் அமலாக்கத்துறையை யார் மீதோ ஏவுகிறீர்களே உதயநிதி மீது ஏவ வேண்டியது தானே. எனவே திமுக பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை என்பதுதான் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பிரச்சினை.

3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வருடம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே உள்ள சட்டம் என்ன என்றால் ஜிஎஸ்டி வரி வசூலில் அந்த அந்த மாநிலங்களுக்கு 41 சதவீதம் கொடுக்க வேண்டும். ஆனால் நமக்கு கொடுப்பதே 29 சதவீத நிதிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று 50 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வாக்கெடுப்பில் நாம் தோல்வி அடைந்தாலும், தமிழ்நாட்டின் குரல் ஒலித்தது அல்லவா? அதுதான் நமது வேலை. பஞ்சாப் மாநிலத்தில் நிதி மசோதாவை நிறுத்திவைக்க முடியாது என்று சொல்வதற்கு கூட ஒரு ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளுக்கு கூட தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஸ்டாலின் வந்த பிறகுதான் மற்ற மாநிலங்களில் தங்களின் உரிமைகளை கேட்கலாம் போல என்கிற யோசனையே வந்துள்ளது. ஆரம்பத்தில்  எல்லோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மோடியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று பார்த்தார்கள். தற்போது அவர் நமக்கு வர வேண்டியதை கொடு என்று தானே கேட்கிறார் என்ற இடத்திற்கு இப்போதுதான் அவர்கள் வந்துள்ளனர். மக்களுக்கான உரிமை குரலை கேட்பது என்பதே தெற்கில் இருந்துதான் வர தொடங்கியுள்ளது.

சுட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்தது உடன், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 2019க்கு பிறகு அனைத்து மாநிலங்களும் பயந்த ஒரு விஷயம் அமலாக்கத்துறை சோதனை வந்தால் என்ன செய்வது என்பதுதான். அதையும் என்ன செய்ய வேண்டும் என்று நாம் செய்து காட்டிவிட்டோம். எனவே எல்லாவற்றுக்கும் நாம் தான் பாடம் சொல்லித்தர வேண்டி உள்ளது. முதலில் பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்பது தான் கேள்வி. அதை நாம் கட்டிவிட்டோம். இது பாஜகவுக்கும், திமுகவுக்குமான பிரச்சினை இல்லை. இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் பிரச்சினையாகும். நாளைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் இருக்கும். முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கே இன்னும் மத்திய அரசு காசு தரவில்லை. ஆனால் இங்கே இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக எடப்பாடி ஆட்சிக்காலத்திலேயே இந்த திட்டத்தை நிறுத்திவிட்டார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார் என்று எடப்பாடி சொல்கிறார். 25 ஆயிரம் ரூபாய் தருகிற இடத்தில் 36 ஆயிரம் தருகிறேன் 3 வருடம் டிகிரி படி என்கிறார் முதலமைச்சர். அந்த 25 ஆயிரம் தங்கத்தை விற்றுவிடலாம். ஆனால் கல்விய யாராலும் திருட முடியாது. எதை செய்தாலும் முதலமைச்சர் தெளிவாக திட்டமிட்டு, நீண்ட கால வளர்ச்சியை நோக்கி திட்டங்களை செயல்படுத்துகிறார். இதை தாண்டி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பெரிய பெரிய வேலைக்கு சென்றிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள்தான்.

தமிழகம் 9.6 சதவித வளர்ச்சியை பெற்றுள்ளது. மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகிற இடத்தில் எல்லாம் பட்டையை கிளப்புகிறார். மொத்த இந்தியாவிலும் ஸ்டாலின் என்பவர் அரசியல் சூப்பர் ஸ்டாராக உள்ளார். உ.பி.யில் ஒரு பெண் சொல்கிறார், தங்களுக்கு ஸ்டாலின் போன்ற முதல்வர் வர வேண்டும் என்று சொல்கிறார். ஸ்டாலின் தனி ஆளாக வந்து மோடியை அடிக்கிறார். மற்ற மாநிலங்களும் ஒன்று சேர்கின்றன. விரைவில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ