ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது, கேள்வியின் நியாயம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.

ரயில் நிலையத்திற்கு வந்த காரை வைத்து விமர்சனம்:
நான் ரயில் நிலையத்திற்கு வந்திறங்கிய கார் குறித்து விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.
அது மலிவான தனிநபர் தாக்குதல். அந்தக் கார் என்னுடையதும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தமாகக் கார் ஏதுமில்லை.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை:
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமையின் அடிப்படையிலேயே எனது ரயில் பயணம் அமைந்துள்ளது.
முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.
இத்தகைய ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்தவொரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது.
ஆடை, கார், பயண வகுப்பு குறித்த விமர்சனங்கள்:
நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.
இந்தக் கேள்வி ‘தூய்மை மற்றும் எளிமை’ எனும் எங்களின் கோட்பாட்டின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அதற்குப் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டம்:
ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காகப் பெருமையோடு என்றும் முன்நிற்போம். ஏனெனில், இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை.
மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்?: திமுக, அதிமுக, பாஜகவின் அரசியல் நகர்வுகள்!
