பொள்ளாச்சி விவகாரத்தை திமுக பெரிய அளவில் எடுத்துச்சென்றதை போல, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை எடுத்துச்சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், ஆனால் அது எடுபடாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலை. மாணவி விகாரம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட வீடியோ தொடர்பாகவும், இந்த விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான பின்னர் ஞானசேகரனை காவல் துறையினர் விடுவித்தார்கள் என்று குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. உண்மையில் நடைபெற்றது என்ன என்றால்? ஞானசேகரனை பிடிப்பதற்கு முன்னதாக இந்த செயலில் அவர் தான் ஈடுபட்டிருப்பார் என்று காவல் உதவி ஆணையர் பாரதிராஜா முடிவு செய்கிறார். இதனால் அவரை முன்கூட்டியே பிடிக்கிறார். அப்போது, திமுக வட்டச் செயலாளராக இருக்கும் கோட்டூர்புரம் சண்முகம் என்பவர் காவல் நிலையத்தில் இருந்து ஞானசேகரனை அழைத்துச் செல்கிறார். அப்படி அனுப்பிவைத்தாலும் அவரது செல்போனில் உள்ள தகவல்களை எடுக்க முடியவில்லை. அதனை சைபர் கிரைம் பிரிவை வைத்து ஆய்வு செய்கிறார்கள். பாலிடெக்னிக் படித்திருக்கும் ஞானசேகரன், தடயங்களை மறைப்பதில் கவனமாக செயல்பட்டுள்ளார். அதேபோல் தடயங்களை மறைத்தும் உள்ளார். சைபர் கிரைம் பிரிவினர் அவரது செல்போனை க்ராக் செய்துதான், மறுநாள் ஞானசேகரனை கைது செய்கிறார்கள்.

அன்றைய தினம் ஏன் காவல்துறை ஞானசேகரனை விட்டது என்றால், கோட்டூர்புரம் சண்முகம் அவர் அதுபோன்ற தவறு செய்ய மாட்டான் என்று சொல்கிறார். மேலும் ஞானசேகரன் செல்போனை தேடி பார்த்தபோது, எந்த தடயமும் இல்லை. அவர் எல்லாவற்றையும் அழித்துவிட்டான். ஆனால் காவல்துறையினர் ஞானசேகரன்தான் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளான் என்பதை முடிவு செய்துவிட்டார்கள். சம்பவம் நடைபெற்ற பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக புகார் அளிக்கவில்லை. பொருத்திருந்து தான் புகார் அளித்தார். காவல்துறையினர் ஞானசேகரை விட்டுவிட்டு அவரை தொடர்ந்து கண்காணித்தார்கள். அதற்குள்ளாக அவனது சொல்போனில் உள்ள அழிக்கப்பட்ட தகவல்களை மீட்கிறார்கள். அதில் மாணவி குறித்த வீடியோக்களை மீட்டனர். அதன் பின்னர் ஞானசேகரனை கைதுசெய்தனர். அண்ணாமலை சொல்கிற கோட்டூர்புரம் சண்முகம், ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவருக்காக வந்து காவல்துறையினரிடம் பேசுகிறார். அவர் காவல்துறை உயர் அதிகாரியிடம் பேசுகிறார்.

மாவட்ட செயலாளராக உள்ள மா.சு, வட்டச் செயலாளராக உள்ள கோட்டுர்புரம் சண்முகத்திடம் பேசுகிறார். அவரது பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நிர்வாகியிடம் பேசுவது தவறில்லை. அவர் ஞானசேகரினிடமோ, அல்லது அவனை காப்பாற்ற காவல்துறையினரிடமோ பேசினாரா? என்ன பிரச்சினை நடக்கிறது என்று கேட்பதில் எந்த தவறும் இல்லை. பல்கலைக்கழக கேட் பொறுப்பாளரிடமும் சண்முகம் தான் பேசியுள்ளார். இவை எல்லாம் ஞானசேகரிடம் சிடிஆர் எனப்படும் கால் டீடெய்ல் ரெக்காடு அண்ணாமலைக்கு முன்பே கிடைத்துவிட்டது. ஐபிடிஆர் பண்ணி பார்த்தால்தான் தெரியும். அது போலீசாரிடம் தான் உள்ளது என்று அண்ணாமலை சொல்கிறார். அவருக்கு சிடிஆர் எடுத்துக் கொடுத்ததே போலீஸ்காரர்கள் தான். அங்கே இருந்தே ஐபிடிஆர் பண்ணிக்கொள்ள வேண்டியது தானே. ஏன் பண்ண முடியவில்லை?. அதற்கு காரணம் அங்கு விஷயம் இல்லை.

வழக்கு புலன் விசாரணைக்கு முன்னதாகவே அண்ணாமலைக்கு இந்த விஷயம் கிடைக்கிறது. செய்தியாளர்களை சந்தித்து என்னிடம் டீடெய்ல்ஸ் ரெக்கார்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்று சொல்கிறீர்கள். சம்பவம் குறித்து முதல் ட்விட் அவர்தான் போட்டார். தற்போது கால் டீடெய்ல் ரெக்கார்டை வெளியிடுகிறீர்கள். அப்போது ஏன் இதை நீதிமன்றத்தில் சென்று சொல்லவில்லை. நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத்தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தாண்டி பல விஷயங்கள் உள்ளது. இதில் சார் என்று ஒருவர் உள்ளார் என்று அவர் சொல்ல வேண்டியது தானே. அந்த மாணவியின் குற்றச்சாட்டு என்ன என்றால்? இன்னொரு சார் வருவார். அவருக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று சொன்னதாக தான் குற்றச்சாட்டு. அப்போது ஞானசேகரனின் போன் பிளைட் மோடில் இருந்தது. அவன் பொய் சொல்கிறான். அவன் ஒற்றைக் குற்றவாளிதான் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சொல்கிறார்.

தற்போது அண்ணாமலை சொல்வதன்படி கோட்டூர்புரம் சண்முகம் வந்து இன்னொரு சாரா? நடராஜன் இன்னொரு சாரா? மா.சு இன்னொரு சாரா? என்றால், அதற்கான ஆதாரங்கள் எங்கே? கோட்டூர்புரம் சண்முகம் 6 நாட்களுக்கு ஒருமுறை தான் மா.சு உடன் பேசுவார். அப்போது மா.சுவுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருந்திருந்தால் அவர், ஞானசேகரிடம் தான் பேசி இருப்பார். ஞானசேகரின் சிடிஆர் அண்ணாமலையிடம் உள்ள நிலையில் அதில் மா.சு வருகிறாரா? அப்போதுதானே யார் அந்த சாருக்கு அர்த்தம் வரும். இவற்றை எல்லாம் ஏன் நீதிமன்றத்தில் ஏன் சொல்லவில்லை. உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவை டிஜிபி சங்கர் ஜிவால்தான் கட்டுப்படுத்த முடியும். அண்ணாமலை இப்படி சொன்னதற்காக, சங்கர் ஜிவால் நினைத்தால் சிறப்பு விசாரணைக்குழு சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கலாம். ஏன் கைதுகூட செய்யலாம். அண்ணாமலை, எடப்பாடி, சவுக்கு சங்கர் ஆகியோரை விசாரிக்கலாம். அது சங்கர் ஜிவாலிடம் உள்ளது. அங்கே எல்லாம் செல்லாமல் சும்மா உட்கார்ந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக யார் அந்த சார்? என்று சொல்வீர்கள். அதுபோன்ற எந்த சாரும் இல்லை என்று நீதிமன்றமே சொல்லி இருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை போன்று, அண்ணா பல்கலை. விவகாரத்தை எடுத்துச் செல்லலாம் என்று நீதிமன்றத்திற்கு சென்றார்கள். ஆனால் காவல் உதவி ஆணையர் பாரதிராஜா, காவல் ஆணையர் அருண் ஆகியோர் இணைந்து அதனை நசுக்கி விட்டார்கள். இவர்களால் எஸ்கேப் ஆக முடியவில்லை. அதனால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அங்கு காவல் ஆணையர் அருண் சொல்வது தான் சரியானது என்று தீர்ப்பு வருகிறது. அதனால் அடி வாங்கினார்கள். அடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கிறார்கள். அப்போதும் அடி வாங்குகிறார்கள். விசாரணை நடந்து தீர்ப்பு வந்தும் அடி வாங்கினார்கள். இவ்வளவு அடி வாங்கியும் பழைய விஷயத்தையே அவர்கள் சொல்ல காரணம் எப்படியாவது இதற்குள்ளாக பிரச்சாரத்தை கொண்டு போக முடியுமா? என்பதுதான். அது எடுபடாது. ஞானசேகரன் மீது 35 வழக்குகள் உள்ளது. ஒர வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். வீடு வீடாக புகுந்து கொள்ளையடித்து 3 பொண்டாட்டிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதுபோன்ற விவகாரத்தில் திமுக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
