spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபேரம் முடிஞ்சிடுச்சி! விஜயை பார்க்க பாவமா இருக்கு ! சுத்தி எல்லமே கொள்ளைக்கூட்டம்!

பேரம் முடிஞ்சிடுச்சி! விஜயை பார்க்க பாவமா இருக்கு ! சுத்தி எல்லமே கொள்ளைக்கூட்டம்!

-

- Advertisement -

கரூர் விவகாரத்தில் இருந்து எப்படியாவது தப்பினால் போதும் என விஜய் கூட்டணி பேசுவார்த்தை நடத்த கட்சியினரை அனுமதிக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாகி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயுடைய அரசியல் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. திமுகவுக்கு எதிராக போகும் மக்கள் மனநிலை, நமக்கு எதிராகவும் போய்விடும் என்று அதிமுக – பாஜகவினர் உள்ளே இறங்குகிறார்கள். விஜயை எப்படி வளைப்பது என்று ஒருபுறம் அதிமுகவும், மறுபுறம் பாஜகவும் வேலை செய்தார்கள். அவருக்கு ஆதரவு தெரிவித்து, கரூர் துயர சம்பவத்திற்கு தமிழக அரசு, காவல்துறை தான் காரணம் என்று கூறினார்கள். இப்படிபட்ட சூழலில் கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை விஜய்க்கும், அந்த கட்சியினருக்கும் தேவைப்படுகிறது. ரகசிய பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி சந்தோஷப்படுகிறார். இதுதான் பிள்ளையார் சுழி என்று சொல்கிறார் என்பதெல்லாம் கிடையாது. பின்னாடி ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. விஜய்க்கு, பாஜக உடன் செல்வதைவிட அதிமுக உடன் செல்வது நல்லது. ஆனால் அதிமுகவால் பாஜகவை கழட்டி விட முடியாது. அப்போது விஜய் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் நிலையில், அதே கூட்டணியில் ஒரு அங்கமாக பாஜக இருக்கும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கரூர் சம்பவம் போன்ற நெருக்கடி ஏற்படுகிறபோது நமக்கு அதிமுக என்கிற எதிர்க்கட்சியின் துணை இருந்தால் நல்லது என்கிற எண்ணத்திற்கு தவெக தொண்டர்கள் வந்துவிட்டனர். தனித்து நின்று, இன்னும் சிக்கலில் மாட்டிக்கொள்வதை விட அதிமுக உடன் கூட்டணிக்கு சென்று விஜயை காப்பாற்றலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால் தான் அதிமுக கூட்டத்தில் தவெக கொடியை பிடித்தார்கள். நாங்கள் பெரிய துக்கத்தில் இருக்கிறோம். 16ஆம் நாள் காரியம் முடியும் வரை பேச மாட்டோம் என்று தவெக தரப்பில் சொல்கிறார்கள். அவ்வளவு துக்கப்படுபவர்களாக இருந்திருந்தால் கரூரை விட்டு சென்னை போயிருக்க மாட்டார்கள். நடிக்க தொடங்கி விட்டார்கள். இனி அவர்கள் செய்வது எல்லாமே நடிப்பாக தான் இருக்கும். போலீஸ்  எங்களை அந்த இடத்தைவிட்டு போக சென்னதால்தான் சென்றோம் என்கிறார்கள். போலீஸ் சொன்ன எல்லாவற்றையும் கேட்டுவிட்டார்களா? கூட்டம் அதிகமாக உள்ளது 50 மீட்டர் முன்னதாக நின்று பேச சொன்னபோது கேட்டீர்களா? அப்போது மக்களுக்கு யோசிக்க தெரியாது என்று தானே நினைக்கிறீர்களா? சரி விஜயை தான் போக சொன்னார்கள். மற்றவர்களையும் காவல்துறையா தலைமறைவாக சொன்னது?

எடப்பாடி பழனிசாமி, தவெக உடன் கூட்டணி வைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியால் திமுக கூட்டணியை வீழ்த்துகிற அளவுக்கு வலிமை இல்லை. அதனால் அவர்களுக்கு இன்னொரு பெரிய கட்சி தேவை. அந்த கட்சி யார் என்றால் தவெக தான். தவெகவுக்கு 10 சதவீதம் வாக்குகள் இருக்கும் என்று அதிமுக, பாஜக நம்புகிறது. தவெக கூட்டணிக்கு வந்துவிட்டால் வாக்குகள் 40 சதவீதத்திற்கு மேல் வந்துவிடும். அதற்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு. தேர்தல் ஆணையம் போன்றவற்றை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் பாஜக இந்த அளவுக்கு இறங்கிவந்து விஜயை ஆதரிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, எப்போதும் தனக்கு என்ன லாபம் வரும் என்றுதான் பார்ப்பார். விஜயை பொருத்தவரை இது மிகப்பெரிய நட்டம். ஆனால் வேறு வழியில்லை. எப்படியாவது கூட்டணி அமைத்து தப்பித்துவிடலாம் என்று நினைத்து, விஜய் சைலண்டாக இருந்துகொண்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கிறார். அதனால் எடப்பாடி பழனிசாமி குஷியாகிவிட்டார். அதிமுக உடன் தவெக கூட்டணி உறுதியாகும். இது கிறிஸ்துமஸ்க்கு உறுதியாகும். திமுக என்கிற பொது எதிரியை அகற்றுவதற்கு கொள்கையை தளர்த்திக் கொள்கிறோம் என்று விஜய் சொல்வார்.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விஜய் ஊடகத்தை வைத்து என்ன எல்லாம் மிரட்ட நினைத்தாரோ? அவ்வளவும் நீதிமன்றத்தில் முகத்திரை கிழிந்துவிட்டது. இன்னும் உச்ச நீதிமன்றத்திலும் கிழியும். அதற்காக தான் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்கிறார்கள். ஏனென்றால் காவல்துறை விசாரணைக்கு போனால் அவர்கள் எல்லா உண்மைகளையும் கக்கி விடுவார்கள். எடப்பாடி பழனிசாமி 30 இடங்களுக்கு மேல் தர மறுக்கிறார். ஆனால் விஜய் முதல்வர் ஆவேன் என்கிறார். முதலமைச்சர் ஆக 118 இடங்கள் வேண்டும். 234 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அதற்கு கட்சி வலிமையாக இருக்க வேண்டும். பிரசாந்த் கிஷோர், உங்களை நான் ஒரு வலிமையான  சக்தியாக பார்க்க விரும்புகிறோன் என்று சொன்னார். அவ்வளவு சாதித்தாலே பெரிய விஷயம். ஆனால் அதுவும் நடக்காது என்று தோன்றுகிறது.

கரூர் மக்களை சந்திக்க செல்வதற்கு விஜய் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். ஒரு கிலோ மீட்டர் தொலைவில் யாரும் இருக்கக் கூடாது என்று விஜய் நினைக்கிறார். இவர்கள் போடுகிற நிபந்தனைகளை காவல்துறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இதையே காரணம் காட்டி கரூருக்கு செல்வதை தவிர்த்து விடலாம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரக்கூடிய ரூ.8 கோடி மிச்சமாகிவிடும். இதற்கு காரணம் ஸ்டாலின் என்று பழியை அவர் மீது போட முடியும். தவெகவில் உள்ள 5 பேரும் நல்ல கிரிமினல்கள் போன்று யோசிக்கிறார்கள். ஒரு பக்கம் விஜயின் பயத்தையும் மறைக்கணும், கரூருக்கு போய் பணம் தராமல் இருக்க வேண்டும். தற்போது இரண்டுக்கும் வழி ஏற்படுத்திவிட்டார்கள். இல்லாவிட்டல் வழக்கம்போல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பனையூருக்கு அழைத்து அந்த நிதியை கொடுத்து விட வேண்டியது தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ