spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த அழைப்பு! சிபிஐயிடம் சிக்கிய ரகசிய வாக்கு மூலம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த அழைப்பு! சிபிஐயிடம் சிக்கிய ரகசிய வாக்கு மூலம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

-

- Advertisement -

விஜயை, அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. விஜய் தொடர்புடைய கரூர் சம்பவத்தில் மட்டும் சிபிஐ அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? சென்னை, டெல்லி, கரூர் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொணடனர். கரூரில் கூட்டமாக விசாரித்தனர். டெல்லிக்கு போனதும் தனித்தனியாக அறையில் வைத்து விசாரித்தனர். போலீசார், கடைகாரர்களை அழைத்து விசாரித்தனர். செயற்கைக் கோள் புகைப்படங்களை எல்லாம் பயன்படுத்தினார்கள்.

விசாரணையின்போது தவெக தரப்பில் போலீசார் கூப்பிட்டதால் தான் வந்தோம். அதனால் தான் விஜய் காவல்துறைக்கு நன்றி சொன்னார் என சொல்லப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் தரப்பில் விஜய், சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்டது ஏன்? தாமதற்கு காரணம் என்ன? நாமக்கல்லில் இருந்து ஒரு கூட்டத்தை அலைத்து வந்தது ஏன்? போலீசார் தடுத்தும் அங்கே போனது ஏன்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்கள்.

கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!

புஸ்ஸி ஆனந்த் இவை எதுவும் தனக்கு தெரியாது என்றும், விஜய் எந்த நாளில் வருவார், எங்கே வருவார் என்பது மட்டும்தான் தனக்கு தெரியும். மற்றவை ஆதவ் அர்ஜுனாவுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லிவிட்டார். ஆதவ் அர்ஜுனா, தான் விஜயுடன் அவ்வளவு நெருக்கமானவர் இல்லை என்றும், அன்றைய தினம் விஜயுடன் வாகனத்தில் வந்ததாகவும், அந்த கூட்டத்தில் மக்கள் அலை அலையாய் உயிருக்கு போராடுவது போல தெரிந்தது. அங்கிருந்து தண்ணீர் கேட்டார்கள். நாங்கள் தண்ணீர் போட்டோம் என்று சொல்லியுள்ளார்.

நிர்மல் குமார், தான் மற்ற 3 பேரும் சொல்வதை கேட்பவர் என்றும், முழு விவரங்கள் தெரிய வேண்டுமானால் விஜயிடம் தான் விசாரிக்க வேண்டும் என்று சொன்னார். விஜய், விசாரணை அமைப்பின் முன்பாக ஆஜர் ஆவதற்கு 100 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. இதில் குற்றவாளி என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அவரை கைது செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

வரும் ஜனவரி 4, 10 ஆகிய தேதிகளில் அமித்ஷா தமிழகம் வருகிறார். விஜய் கூட்டணிக்குள் வருவதாக ஜன.4ம் தேதிக்குள் சிக்னல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ஆம் தேதி அமித்ஷா வரும்போது விஜய்க்கான சம்மன் டெல்லியில் தயார் ஆகிவிடும். அப்போதும் அவர் கூட்டணிக்கு வரவில்லை என்றால்? விஜயை கைது செய்வார்கள்.அப்படி கைது செய்தாலும் திகார் சிறையில் தான் அடைப்பார்கள். அவர் தாங்குவாரா? விஜயை அதிமுக கூட்டணிக்கு அழைப்பதாக இருந்தால், பவன் கல்யாண் பார்முலா தான் சொல்வார்கள். விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி தர சொல்வார்கள்.

ஆனால் விஜயை, துணை முதலமைச்சர் ஆக  அறிவிக்க எடப்பாடி தயாராக இல்லை. தேர்தலுக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் விஜய், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து களத்தில் இறங்குகிறார். மலேசியாவில் விஜய் நிகழ்ச்சியை நடத்தியவர் மாலிக். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கும், போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவருடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதை மாலிக் மறுத்துள்ளார். அவரை அந்நாட்டு அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

விஜய் விமானத்தில் இறங்கி வரும்போது போதையில் தடுமாறி விழுந்ததாக சொல்லப்படுகிறது. அந்த விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை எல்லாம் சிபிஐ எடுத்துள்ளது. ஒருவரை பணிய வைப்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். சுப்பிரமணிய சுவாமியோடு முடிந்துவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பிராமண லாபி, பிரவீன் சக்ரவர்த்தி மூலம் மீண்டும் வருகிறது. பிரவீன் சக்ரவர்த்தி ஒரு டெல்லியின் அண்ணாமலை ஆவார். பிடிஆர் அவரிடம் பேசிய ஆடியோ போன்று பலருடைய ஆடியோக்களை அவர் வைத்துள்ளார். அதன் காரணமாக தேசிய அளவில் அவரை பார்த்து பயப்படுகிறார்கள்.

செல்வப்பெருந்தகை இரண்டு முறை பிரவீன் சக்கரவர்த்தி மீது புகார் அளித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறபோது, தமிழ்நாட்டில் நடப்பதை பொருட்படுத்த வேண்டாம். டெல்லி மேலிடத்தில் பேசுங்கள் என்று சொன்னார். திமுகவும் சோனியா காந்தி, ராகுல்காந்தியிடம் தான் நேரடியாக பேசுகிறார்கள். அதையும்  மீறி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சினை செய்கிறார்கள் என்றால்? ஸ்டாலின் அவர்கள் போகட்டும் என்று சொல்லிவிட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ