spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடிடிவி தினகரனை தூக்கியடிச்சிட்டாங்க! ஆட்டம் இனிமேதான்! ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்! எஸ்.பி. லட்சுமணன் பேட்டி!

டிடிவி தினகரனை தூக்கியடிச்சிட்டாங்க! ஆட்டம் இனிமேதான்! ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்! எஸ்.பி. லட்சுமணன் பேட்டி!

-

- Advertisement -

அதிமுகவில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. அந்த கட்சி அழிந்தால் போதும் என்கிற மனநிலையில் பாஜக உள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் தினகரனின் புறக்கணிப்பின் தொடக்கம் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

என்.டி.ஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் புறக்கப்படுதன் பின்னணி குறித்து, மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மூப்பனார் நினைவு தினக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு இடம் வழங்கப்படவில்லை. அண்ணாமலை இருந்தபோதும், அதன் பிறகு நயினார் பாஜக மாநிலத் தலைவராகிய போதும் தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சொல்ல வேண்டிய இடத்தில், வாய்ப்பு இருந்தபோதும் அமித்ஷா சொல்லவில்லை.  எடப்பாடி பழனிசாமி, மேட்டுப் பாளையத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய போது நயினாரையும், எல்.முருகனையும் மட்டும் அழைத்துக்கொண்டார். அதன் பிறகு டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த ஒரு பயம் கலந்த தயக்கம் பாஜகவினரிடம் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அமித்ஷா இன்னும் சொல்லவில்லை. பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டது சிறுபிள்ளைத் தனமானதாகும். அதற்கு காரணம் அரசியல் பேச்சு வார்த்தைகள் எல்லாவற்றையும் நடத்துவது அமித்ஷா தான். நான் பிரதமரை சந்திக்க நயினாரிடம் நேரம் கேட்டபோது, போனை எடுக்கவில்லை என்று ஓபிஎஸ் சொன்னார். ஆனால் நயினார் தனக்கு ஓபிஎஸ் போனே போடவில்லை என்று சொல்லி அசிங்கப்படுத்தினார். அதனால் தான் கூட்டணியில் இருந்து வெளியே சென்றார். என்டிஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவதற்கு முழு முதற் காரணம் பாஜக தான்.

எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய பிரச்சாரத்தின் இடையே ஒரு பிரம்மாண்டமான கட்சி வரப் போகிறது என்று சொன்னார். எல்லோரும் விஜய் கட்சி வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், மதுரை தவெக மாநாட்டில் விஜய் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். விஜய் இனிமேல் எந்த வடிவத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது இனி பெரிய கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. அப்படி பாட்டாளி மக்கள் கட்சி வந்தாலும் இரு அணிகளாக தான் வரும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக, என்டிஏ கூட்டணிக்கு சென்றார்கள். எனவே அதிமுக – பாஜக இடையே உறவு ஏற்படவில்லை. ராமதாஸ், அன்புமணி இனி சேர்ந்தாலும், பாமகவுக்கு பழைய வாக்கு வங்கி இருக்காது. அந்த சின்ன பலவீனத்தோடு பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்தாலும் அது பிரம்மாண்ட கட்சி என்று சொல்ல முடியாது. அப்போது அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்த வேண்டிய இடத்தில், அது குறித்த சிந்தனையோ கவலையோ எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஜான்பாணடியன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அதிலும் தினகரன் அழைக்கப்படவில்லை. அவர் பாஜகவின் ஆலோசனை இன்றி செயல்பட மாட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? - என்.கே.மூர்த்தி

தற்போது வாசன் ஒரு வேலையை செய்கிறார். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது மூப்பனார் நினைவு தினம் ஏன் கவனிக்க தக்க வகையில் நடைபெறுகிறது என்றால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தேர்தல் வந்துவிடடது. வாசனுக்கு நன்றாகவே தெரியும் நாம் ஒரு மேடையை கட்டமைக்கப் போகிறோம் என்று. அந்த மேடைக்கு சுதீஷை வரவைப்பதன் மூலமாக எந்த அணியிலும் சேராமல் இருக்கும் தேமுதிகவை நம்ம அணிக்கு வரவைக்கலாம் என்று தான் வாசன் மெனக்கெடுகிறார். மற்ற எல்லோரையும் வாசன் அழைத்து இருக்கலாம். ஆனால் தினகரனை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. அப்போது எடப்பாடிக்கு  அல்லது பாஜகவுக்கு வாசன் பயப்படுகிறார். அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு டிடிவி தினகரனை அழைக்கவில்லை. இதை தினகரன் முன்கூட்டியே உணர்ந்துவிட்டார். அதனால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக களத்தை தயார் செய்கிறார். எதார்த்தத்தை பேசுகிறார்.விஜய் எதிர்வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்கிறார். விஜய் கணிசமான வாக்குகளை பெறவார் என்றும் சொல்கிறார்.

இனி எதற்காக தினகரன் என்டிஏவில் நீடிக்க வேண்டும். அவமதிப்புகளை சுமந்துகொண்டு நிற்க வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு இல்லை. அவரிடம் ஒரு சதவீதம் வாக்குகள் இருக்கலாம். 200 தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் போட்டுள்ளேன் என்று சொல்லியுள்ளார். இனிமேலும் அந்த கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்று அவரது மனசாட்சி கேள்வி கேட்க தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். இது அவருக்கான தேர்தல் இல்லை. தன்னுடைய இருப்பை தக்கவைக்க தான் அவர் முயற்சிக்கிறார். 90 சதவீதம் அவர் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடுவார். 100 சதவீதம் அவர் வெளியே வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். 2021ல் அதிமுக கூட்டணியில் தினகரனை சேர்க்க அமித்ஷா முயற்சித்தார். ஆனால் எடுபடவில்லை. அப்போது தனியாக நின்று 23 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

2024ல் எல்லோரும் போய் பார்த்தார்கள் எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை. தேமுதிகவை தவிர வேறு யாரும் வரவில்லை. தற்போது மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி தன்னம்பிக்கையோடு தனியாக நிற்கலாம் என்று பார்க்கிறார். அடித்தளம் பலவீனமாக வைத்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு சென்றால் வெற்றி என்பது எட்டாக்கனி தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு டிடிவி தினகரனும், ஓபிஎஸ்-ம் காரணமாக இருந்தார்கள் என்று எல்லோருக்கும் அப்பட்டமாக தெரிகிறது. அது தெரிந்து இருந்தும் பாஜக வேடிக்கை பார்ப்பதற்கு காரணம்? திமுக ஆட்சிக்கு வருவதற்கு அதிமுகவும், பாஜகவும் பாடுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

அதிமுகவை ஒழிக்கும் நடவடிக்கையில் பாஜக முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. நெல்லை மாநாட்டில் அதிமுக + பாஜக கூட்டணி சேர்ந்தால் 41 சதவீதம் என்று அமித்ஷா சொன்னார். அதில் பாஜகவுக்கு கிடைத்த 18 சதவீத வாக்குகள் யாருடையது? பாமக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர்தான் இந்த 18 சதவீத வாக்குகள் கிடைப்பதற்கு காரணம். அவர்களை இன்றைக்கு என்ன நிலையில் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இது தெரிந்தும் அவர்களை கைவிடுகிறார்கள் என்றால்? அதிமுக பலவீனமடையும். அது பாஜகவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்கிற கொடூரமான கணக்குதான். இதை அதிமுக தொண்டர்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும். ஓபிஎஸ், தினகரனுக்கு கிடைத்த வாக்குகள் எடப்பாடி எதிர்ப்பு வாக்குகள் என்றும், எனவே விஜய், தினகரன், ஓபிஎஸ் கூட்டணி அமைத்தால் அந்த வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் தடுக்கலாம் என்றும் ஒரு கணக்கு சொல்கிறார்கள். அதிமுகவின் அடிநாதமே திமுக எதிர்ப்புதான். அவர்கள் ஒருபோதும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் விஜய் பக்கம் போக வாய்ப்பு இருக்கிறது. விஜய் அப்படி ஒரு அறைகூவல் விடுத்தபிறகு எடப்பாடியை பிடிக்காதவர்கள் விஜய் பக்கம் செல்வதற்கு தயாராவார்களே தவிர, திமுகவுக்கு போகமாட்டார்கள். இத்தனை பலவீனங்கள் இருந்தும் எடப்பாடி மவுனமாக இருக்கிறார் என்றால் தன் கட்சி அழிவதை அவரே வேடிக்கை பார்க்கிறார் என்றால், அப்போது திமுக வருவதை ரசிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. என்ன நடந்தாலும் அதிமுக அழிந்தால் போதும் என்கிற மனநிலையில் பாஜக உள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் தினகரனின் புறக்கணிப்பின் தொடக்கம். என்ன செய்தால் அவராக வெளியே செல்வார் என்றுதான் பாஜக விரும்புகிறதோ என்று தான் நான் பார்க்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ