Homeசெய்திகள்கட்டுரை"எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!" – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!

“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!

-

- Advertisement -

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விசிகவைச் சேர்ந்த வன்னியரசுவின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் தவெக (TVK) மீதான அவரது தீவிர ஈடுபாடு ஆகியவை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.

we-r-hiring

தவெகவின் காலடியில் விழுந்த வன்னியரசு?

சட்டமன்றத்தில் நடிகர் விஜய் நடித்த படத்தின் வரிகளைச் சுட்டிக்காட்டி, அது பாரதிதாசனின் ஜாதி ஒழிப்புப் பாடல்களுக்கு நிகரானது என்று வன்னியரசு புகழ்ந்து த தள்ளியுள்ளது அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர்களை விடவும் தீவிரமாக அக்கட்சியின் கொள்கைகளையும் விஜய்யையும் தூக்கிப் பிடிக்கும் அவரது போக்கு, “ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம்” என்ற வகையிலேயே பார்க்கப்படுகிறது. திமுக மீது அவதூறுகளை அள்ளிவீசிவிட்டு, தவெகவைச் பிரியமுடன் அணைத்துக்கொள்ளும் இந்தச் சரண்டர் அரசியல் யாருக்காக என்ற கேள்வி வலுத்துள்ளது.

மௌனம் காக்கும் சமூக நீதி குரல்கள்!

இதுவரை தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள், சாதிக்கொலைகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் கொந்தளித்து எழுந்த குரல்கள், தற்போது தவெக கூட்டணியின் நிழலில் முழுமையாக மௌனிக்கடிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள், இன்று தவெக தலைமைக்குச் சாமரம் வீசுவதற்காகத் தங்கள் கொள்கைகளைத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த சமூக நீதி அரசியலுக்கும் இழைக்கப்படும் துரோகம் என்றே விமர்சிக்கப்படுகிறது.

நன்றியுரையோடு முடிந்துபோன மானியக் கோரிக்கை விவாதம்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பெரும்பகுதி தவெக தலைமையை மகிழ்விப்பதற்கும், சம்பந்தமே இல்லாத நன்றியுரைகளுக்கே செலவிடப்பட்டிருப்பது வன்னியரசுவின் அரசியல் திவால்நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. சினிமா மோகத்தில் மூழ்கி, மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் திசைதிருப்பும் இந்தத் தற்காலிக அரசியல் வியூகங்கள், விசிகவின் பாரம்பரியமான லட்சியங்களுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கப் போகிறது என்பதை எதிர்காலக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது – வல்லம் பஷீர் விமர்சனம்

MUST READ