spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபட ரிலீசுக்காக விஜய் பக்கா பிளான்! பொளந்து எடுத்த ராஜகம்பீரன்!

பட ரிலீசுக்காக விஜய் பக்கா பிளான்! பொளந்து எடுத்த ராஜகம்பீரன்!

-

- Advertisement -

ஜனநாயகன் படத்தின் வெளியீட்டிற்காகவே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவசர அவசரமாக விஜய் சந்தித்து, நிவாரண நிதி வழங்கினார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

we-r-hiring

தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் மீது முன்வைத்துள்ள விமர்சனகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் அரசியல் என்பது, ஒரு நதிக்கு இரண்டு கரைகள் போன்று ஒரு கரை திமுக, மறுகரை அதிமுக.  இன்றைக்கு அதிமுக என்கிற ஒரு கரையை தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்கள் உடைத்துவிட்டனர். எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறார். வாக்கு சதவீதம் சரிந்துவிட்டது. இந்த சூழலில் அவர்களின் இடத்திற்கு தவெக வர நினைக்கிறது.

விஜய் வந்தால் கூட்டம் வரும் என்று சொல்கிறவர்கள், விஜய் அல்லாத மற்றவர்கள் எல்லாம் களத்தில் நின்றோம் என்று சொல்வதற்கு அவர்களுக்கு அறுகதை உள்ளதா? இவ்வளவு பேசுகிற ஆதவ் அர்ஜுனா ஏன் தலைமறைவாகினார்? விஜயை அனுப்பி வைத்துவிட்டு, ஆதவ் அர்ஜுனா களத்தில் நின்றிருந்தால் அவர் யோக்கியமானவர் என்று நம்புவோம். ஆனால் அவர் பேசுவது எல்லாம் பொய்யாக உள்ளது. கலைஞர் கைதின்போது ஸ்டாலின் தப்பி ஓடியதாக எவ்வளவு வரலாற்று பிழையான செய்தியை ஆதவ் அர்ஜுனா பேசுகிறார்.

மக்கள் கூட்டம் வருவதால்தான் ஒருவர் தலைவராகிறார். ஆனால் எங்களுக்கு தான் கூட்டம் வருகிறது என்று சொல்வதில் தான் அயோக்கியத்தனம் உள்ளது. இந்த பொய்களுக்கு ஊடகங்கள் எல்லாம் பொறுப்பேற்று கொள்கின்றன. ஒரு கற்பனைக்கு 50 லட்சம் வாக்காளர்கள் விஜயை ஆதரிப்பதாக வைத்துக் கொண்டாலும் எஞ்சிய 6 கோடி பேர் விஜய்க்கு எதிராக உள்ளனர். 40 வயதை கடந்த ஒருவர் கூட விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள். இளைஞர்கள் எல்லாம் விஜய் பின்னால் இருப்பதாக ஊடகங்களால் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

இந்தி மொழியை திணித்த காங்கிரஸ் கட்சிக்கு உடந்தையாக காமராஜர் இருந்தார். எனவே அவரை திமுக தோற்கடித்தது. அது காமராஜருக்கான தோல்வி அல்ல. அது இந்தி திணிப்பிற்கான தோல்வியாகும். இல்லாவிட்டால் ஒரு கல்லூரி மாணவர் காமராஜரை தோற்கடித்திருக்க மாட்டார்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
விஜய் மற்றும் எம்.ஜி.ஆர்.

 

பாஜகவை எதிர்க்கும் வேலையை திமுக சரியாக செய்யாததால், விஜய் நாங்கள் செய்கிறோம் என்று சொல்கிறார். அவர் எங்கே பாஜகவை எதிர்த்து பேசினார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது நாவலர் நெடுஞ்செழியன், ராஜாராம், காளிமுத்து, அரங்கநாகம் போன்ற எத்தனை தலைவர்கள் அவரை வழிநடத்தினார்கள். எம்ஜிஆர் தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆதவ் அர்ஜுனா போன்ற முட்டாள்களை உடன் வைத்திருந்தாரா? தன்னைவிட அறிவாளிகளையும், களப்பணி செய்பவர்களையும் எம்ஜிஆர் உடன் வைத்திருநதார். அதனால் அந்த அரசியல் தப்பிவிட்டது.

நடிகர் என்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கான தகுதி அல்ல. ஊடகம் என்பது இன்றைக்கு சினிமா மட்டும்தானா? புதிதாக உங்களால் ஒன்றை சொல்ல முடியவில்லை என்றால், புதிதாக உங்களால் சிந்திக்க முடியவில்லை என்றுதான் அர்த்தம். கற்பனையான சினிமா எடுப்பதற்கே புதிய சிந்தனைகள் தேவைப்படும்போது, ஒரு அரசியல் கட்சியை கட்டமைக்க உனக்கு புதிய சிந்தனைகள் தேவைப்படாதா?

அண்ணா கொண்டுவந்த மாற்றத்தை கொண்டுவரப் போவதாக விஜய் சொல்கிறார். அண்ணா குறித்து விஜயக்கு என்ன தெரியும்? அணணா ஆரிய மாயை என்கிற புத்தகத்தை எழுதி 6 மாதம் சிறைக்கு சென்றார். அது விஜய்க்கு தெரியுமா? ஆரியமாயையில் என்ன சொல்லியுள்ளார் என்று தெரியுமா? எதற்காக காரல் மார்க்ஸை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்? ஏற்கனவே இருக்கிற கொள்கைகளை, தத்துவங்களை உள்வாங்கி கொண்டுதான் புதிய தத்துவங்களை உருவாக்க வேண்டும். ஆனால் அவர் புதிதாக என்ன கொள்கையை சொல்வது என்கிறார். தற்போது ஜனநாயகன் பட புரமோஷன் பணிகளுக்காக தான் அவர் பாதிக்கப்பட்ட மக்களை அவசர அவசரமாக சந்தித்தார். பல கோடி ரூபாய் வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் கொடுத்தால், அவர்களுடைய வீட்டிற்கு போக வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றில் இப்படி எங்காவது நடைபெற்றுள்ளதா? இதுபோன்ற முட்டாள்தனத்தை யாராவது செய்துள்ளனரா? உடனிருப்பவர்களும் அதை சொல்ல மாட்டார்களா? ஒத்த எப்.ஐ.ஆருக்கு மொத்த கட்சியும் காணாமல் போனது. இந்த லட்சணத்தில் நாட்டை ஆள துடிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு கூட விஜய் தகுதி இல்லாதவர். தேர்தல் முடிந்த உடன் அவர் ஜனநாயகன் 2ல் நடிக்கப் போகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ