spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!

ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவர் ஜகதீப் தன்கர். குடியரசுத் துணை தலைவர் ஆனபோதும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில், அதற்கான பின்னணி குறித்து விளக்கி மூத்த பத்திரிகையாளர் உமாபதி காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- இந்திய குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜெகதீப் தன்கர், தேசிய அளவிலான அரசியலில் பெரிய விமர்சனத்திற்கு உள்ளான தலைவராக கருதப்படுகிறார். இதுவரை குடியரசுத் துணை தலைவர் பொறுப்பு வகித்த நபர்கள் யாரும், அதில் இருந்து ராஜினாமா செய்த வரலாறு கிடையாது. அப்படி இருக்கும் சூழலில ஜகதீப் தன்கர் திடீரென நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய இந்த முடிவுக்கு மூன்று காரணங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. முதலாவது உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தமாக இருக்கலாம். இரண்டாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொடுத்த அழுத்தமாக இருக்கலாம். மூன்றாவது பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்ட செக் ஆக இருக்கலாம்.

நாடாளுமன்ற விவகாரங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் யார் என்று நன்றாகவே தெரியும். நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசுத் துணை தலைவர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டதற்கு காரணம், இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் – பாஜககாரர் என்பதால் அல்ல. ஜனதா தளம் கட்சி சார்பில் பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். அவரது அரசில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இந்தியாவில் மிகப்பெரிய சைத்தான்கள் என்று சந்திராசாமி, மாமாஜி, சந்திரசேகர் மற்றும் சுப்பிரமணியசாமி ஆகியோரை குறிப்பிடுவார்கள். இந்தியாவை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின்னணியில் இருந்து இவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த துரோக கும்பல்தான் திடீரென ஆட்சிக்கு வருகிறது. அவரது ஆட்சிக் காலத்தில் தான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சுப்பிரமணியசாமி, சந்திரசேகர் போன்றவர்களை விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷனில் கோரிக்கை எழுந்தது. ஆனால் அனைவரும் தப்பிவிட்டனர். 4 பேரில் தற்போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் தான் உள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த கும்பலின் தலைவர்தான் சந்திரசேகர். எந்தவித கட்சி செல்வாக்கோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத சந்திரசேகர், ஒரே ஒரு எம்.பி. பதவியை வைத்துக்கொண்டு நாட்டின் பிரதமர் ஆனவர். அவரிடம் 6 மாதங்கள் அமைச்சராக இருந்த ஜகதீப் தன்கர், பின்னர் கங்கிரசில் இணைந்தார். அங்கும் தனக்கு எதிர்காலம் இல்லாததால் பாஜகவை அணுகுகிறார். அப்போது மேற்குவங்கத்தில் ஆளுநர் பதவி தருவதாகவும், முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜிக்கு தொல்லைக் கொடுத்து, அவரை செயல்படவிடாமல் முடக்கினால் அடுத்தக்கட்ட வளர்ச்சி இருக்கும். அப்படி இல்லா விட்டால் ஆளுநர் பதவியுடன் சென்றுவிட வேண்டும் என்று பாஜக நிபந்தனை விதித்தது. அதனை ஏற்று ஜகதீப் தன்கர், மேற்குவங்க ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அரசுக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்தார். அதற்கு மம்தா தரப்பிலும் தக்க பதிலடி தரப்பட்டது. ஒரு கட்டத்தில் மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகையில் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இப்படி மம்தாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியதால், அவரது செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக குடியரசு துணை தலைவர் பதவியை பாஜகவினர் கொடுத்தார்கள். இதன் மூலம் நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவராகிய ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகவே மாறினார். இதனால் எதிர்க்கட்சிகள், தன்கர் மீது கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோர் முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது. அப்போது, குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்றும், நாடாளுமன்றமே உயரியது என்று தன்கர் கருத்து தெரிவித்தார். இவருடைய கருத்தால் உச்சநீதிமன்றம் கடும் கோபம் கொள்கிறது. அதனால் ஜெகதீப் தன்கருக்கு உச்சநீதிமன்றம் செக் வைக்கிறது. தற்போது எந்த செக்கில் அவரது பதவி காலியானது என்ற விவரம் தெரியவில்லை.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகினாரா? என்று தெரியவில்லை. அல்லது ஆர்எஸ்எஸ் வயது ஆகிவிட்டது என்று சொல்லி தன்கரை வீட்டிற்கு அனுப்பிவிட்டதா? அல்லது மோடிக்கு செக் வைக்கும் விதமாக 75 வயதாகி விட்டது முதலில் நீங்கள் வெளியே போங்க, பின்னர் மோடியை ராஜினாமா செய்ய சொல்லலாம் என்று செய்தார்களா என தெரியவில்லை. இவை தவிர்த்து ஜகதீப் தன்கர் தனது மகளின் தொழில் நடவடிக்கைகளுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எனினும் அவர் எந்த பிரச்சினை காரணமாக ராஜினாமா செய்தார் என்கிற விவரம் விரைவில் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ