அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ள போதும், யுரேனியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் யுரேனியத்தை செருவூட்டும் பணி கொஞ்சம் கால தாமதமாகும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா பின்வாங்கியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- துணை தளபதி ஒருவர் அளித்த பேட்டி கடந்த 2 நாட்களாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யுரேனியத்தை செறிவூட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களின் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் என்ற வெடிகுண்டை பி-2 என்கிற அதிபயங்கர விமானம் மூலம் வீசியது. இந்த பி-2 விமானம் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரே நேரத்தில் பயணிக்கும். 3000 கிலோ எடையை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்கியது. அணுசக்தி நிலையங்கள் மட்டுமின்றி, பூமிக்கு அடியில் எது இருந்தாலும் பூமிக்கு அடியில் துளை போட்டு சென்று அழித்துவிடும் என்றும் கதை விட்டார்கள். இந்த விமானமும் சென்றது. ஃபர்டோ என்கிற இடத்தில் உள்ள அணுசக்தி நிலையத்தை தாக்கியது. மேலும் 2 இடங்களிலும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா சொன்னாது. ஆனால் அது பொய் என்று அப்போதே சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ துணை தளபதி பேட்டி அளித்துள்ளார். ஒரு இடத்தில் தான் பங்கர் பஸ்டர் தாக்குதல் நடத்தினோம். மற்ற 2 இடங்களில் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினோம் என்று சொல்கிறார். மேலும், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் வலிமை வாய்ந்தவை என்றும், செயற்கைக்கோள்கள் சென்சார் உள்ளது. அந்த சென்சார் மூலம் ஏவுகணை புறப்படும் இடத்திலோ, நாடு வானில் செல்கிறபோதோ அல்லது இலக்கில் விழுகிறபோதே தாக்கி அழிக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இதை எல்லாம் பொய்யாக்கும் வகையில் ஈரான் ஏவிய அனைத்து ஏவுகணைகளையும் இஸ்ரேலை துல்லியமாக தாக்கி அழித்தன. இந்நிலையில், தங்களிடம் ஜி.எம்.டி என்கிற சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளதாகவும், அது இஸ்ரேலிடம் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அப்போது இது உண்மையா? பொய்யா? என்கிற கேள்வியும் எழுகிறது.
தாட் என்கிற பாலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பு அமெரிக்காவிடம் உள்ளது. தாட் அமைப்பு, எதிரிகளின் ஏவுகணை இலக்கின் அருகாமையில் செல்கிறபோது கீழ் இருந்து தாக்கி அழிக்கும். தற்போது தங்களை நோக்கி ஏவுகணை கிளிம்பினாலே அதை அழித்துவிடும் என்று சொல்கிறார்கள். ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வர ஏவுகணைகளுக்கு குறிப்பிட்ட காலமாகும். அப்போது இடையில் வானில் அழிப்பது சாத்தியமானது. ஆனால் ஈரானில் இருந்து ஏவுகணை புறப்பட்ட உடனே அழிக்கும் என்றால், அமெரிக்காவின் தடுப்பு அமைப்பு அங்கேயே இருக்கிறதா என கேள்வி எழும். அதுபோக அமெரிக்க துணை தளபதி ஓரிடத்தில் மட்டுமே பங்கர் பஸ்டர் பயன்படுத்தினோம் என்று சொல்கிறார். குறிப்பாக இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தின் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும், அவர்கள் நிலத்திற்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பங்கர் பஸ்டர் போட்டாலும் எந்த பயனும் இல்லை என்பதால் ஏவுகணைகளை வீசியதாகவும் அமெரிக்க துணை தளபதி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தங்களின் அணு சக்தி நிலையங்களின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக ஈரான் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதே வேளையில் யுரேனியம் பாதுகாப்பாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது. உட்கட்டமைப்புகளை சரிசெய்து, யுரேனியம் செறிவூட்டுகிற பணியை தொடங்க இன்னும் கொஞ்சம் காலமாகும் என்றும் ஈரான் கூறியுள்ளது. எனவே தங்களின் முயற்சி பின்னோக்கி சென்றுள்ளதே தவிர, பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது ஈரான். இதனிடையே, இஸ்ரேலின் அயர்ன் டோம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா வான் பரப்பு முழுமைக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் கோல்டன் டோம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதுவும் செயல்பாட்டிற்கு வருமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போரை பொருத்தமட்டில் ஈரானில் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆயுத வியாபாராத்தை ஈரான் உடைத்து நொறுக்கியுள்ளது. இதன் காரணமாக நீண்ட காலத்திற்கு அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இஸ்ரேல் இழப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் 10 வருடங்கள் ஆகும். அவர்களுக்கு அமெரிக்கா தான் உதவும். ஆனால் முழுமையான சேதத்திற்கும் உதவி செய்யாது. முதலில் ஈரானை தாக்கி ஒரு லட்சம் கோடி அளவிலான சேதத்தை ஏற்படுத்திவிட்டு 10 ஆயிரம் கோடி நிதியுதவி கொடுத்து நம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் என்று இரு நாடுகளும் நினைத்தார்கள். ஆனால் ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் அதுபோன்ற ஒரு சேதத்தை சந்தித்து உள்ளது. கிட்டத்தட்ட 2-3 லட்சம் கோடி அளவிலான சேதம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு பணம் எப்படி அமெரிக்கா தரும்.
சவுதி அரேபியா, கத்தார், யுஏஇ போன்ற நாடுகளிடம் அமெரிக்கா மாமுல் வங்கியது, 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 7 லட்சம் கோடிதான். அதில் 3 லட்சம் கோடியை இஸ்ரேலுக்கு கொடுத்தால் எப்படியாகும். எனவே இஸ்ரேல் மிகப்பெரிய பின்னடைவில் உள்ளது. அவர்கள் வாயே திறக்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் பிரதமர் நெதன்யாகுவை பதவியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இஸ்ரேல் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்ததிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு புரட்சி போன்ற விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் செய்த அக்கிரமத்திற்கும் அநியாயத்திற்கும் ஒரு பாடம் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.