spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய கரி நாட்கள்: சோதிடமும் வானியலும் கூறும் உண்மைகள்!

சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய கரி நாட்கள்: சோதிடமும் வானியலும் கூறும் உண்மைகள்!

-

- Advertisement -

‘கறுப்பு நாள்’ என்று அழைக்கப்படும் இந்தக் கரி நாட்கள், உண்மையிலேயே துரதிர்ஷ்டமான நாட்களா? அல்லது, சூரியனின் கதிர்வீச்சு அதிகரிப்பதுதான் இதற்குக் காரணமா? தமிழ் மாதங்களில் எந்தெந்தத் தேதிகள் கரி நாட்களாகக் கருதப்படுகின்றன?

சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய கரி நாட்கள்: சோதிடமும் வானியலும் கூறும் உண்மைகள்!கரி நாள் என்றால் என்ன?

we-r-hiring

கரி நாள் என்பது சோதிடத் துறையில் கூறப்படும் நாட்களுள் ஒன்றாகும். இது பொதுவாக சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய நாளாகக் கருதப்படுகிறது.

கரி நாள் என்றால் ‘கறுப்பு நாள்’ அல்லது ‘கறுப்பு தினம்’ என்ற பொருளும் உண்டு. சோதிடத்தில் இதை “மாத தியாஜ்ஜியம்” அல்லது தக்த யோகம் என்றும் குறிப்பிடுவர்.

வானியல் அடிப்படையில் கரி நாள் என்பது சூரியனின் தீட்சண்யம் (கதிர்வீச்சு) அதிகமாக இருக்கின்ற நாட்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட தமிழ் மாதத் தேதிகளில் சூரிய கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாட்களை கரி நாட்களாகக் கணக்கிடுகின்றனர்.

இந்த கரி நாட்களில்  திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், புதிய முயற்சிகள் போன்ற மங்களகரமான செயல்களைத் தவிர்ப்பது நல்லது என்று நம்பப்படுகிறது.

எனினும், பூஜைகள், ஹோமங்கள், பரிகாரங்கள் ஆகியவற்றை கரி நாட்களில் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. கரி நாட்கள் தமிழ் மாதத்தின் குறிப்பிட்ட தேதிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் மாறாதவை.

சில நம்பிக்கைகளின்படி, இந்தக் கரி நாட்களில் சந்திரன் மற்றும் பிற கிரகங்களின் நிலைகள் சாதகமற்றதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பழங்கால நிகழ்வுகளை வைத்து சில ஆய்வாளர்கள், கரி நாட்கள் என்பது வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்துபோன நாட்களாக இருக்கக்கூடும் என்றும், அதனால் இந்நாட்களில் மங்களகரமான செயல்களைத் தவிர்க்கிறார்கள் என்றும் கருதுகின்றனர்.

தமிழ் மாத கரி நாட்கள் பட்டியல்

எண்தமிழ் மாதம்கரி நாட்கள் (தேதிகள்)
1சித்திரை6, 15
2வைகாசி7, 16, 17
3ஆனி1, 6
4ஆடி2, 10, 20
5ஆவணி2, 9, 28
6புரட்டாசி16, 29
7ஐப்பசி6, 20
8கார்த்திகை1, 4, 10, 17
9மார்கழி6, 9, 11
10தை1, 2, 3, 11, 17
11மாசி15, 16, 17
12பங்குனி6, 15, 19

காயத்ரி ஜபம்: மகத்துவமும் பலன்களும்

MUST READ