Homeசெய்திகள்ஆன்மீகம்பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா

பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா

-

பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.

இந்த தேர் பவணியில் கிறிஸ்தவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாதாவின் புகழ் பாடி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

சென்னை அடுத்த மண்ணூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த தேர் பவனி கொரட்டூர் சிக்னலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை இழுத்து வந்து தேரை சகாய அன்னை ஆலயத்தில் பக்தர்கள் சேர்த்தனர்.

வழி எங்கும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்கள் தூவியும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஆவடி, அம்பத்தூர், கள்ளிக்குப்பம், புதூர், கொரட்டூர் பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாதாவின் புகழ் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா
புனித சகாய அன்னை ஆலயம்

அருட்தந்தை சந்தியாகு மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகாய அன்னை ஆலயத்தின் உபதலைவர் சகாய ராஜன், செயலாளர் அன்புரோஸ், பொருளாளர் ஜான் பீட்டர் ஆகியோர் அருட்தந்தைக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பி.டி ரோமியோ, எல்.செல்வம், லாசர் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ