spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

-

- Advertisement -

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு.

திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்று விழா நேற்று(25.02.2023) நடைப்பெற்றது.

we-r-hiring

இதனை தொடர்ந்து காலை உற்சவர் முருகன் பெருமாள் வள்ளி தெய்வானையுடன் தேர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தர். காலை 8.30 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா” என்று பக்தி கோஷங்களை முழங்கினார்.

தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் உற்சவர் முருகர் பெருமாள் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் ஒவ்வொரு வாகனத்தில் காலை, மாலை என்று இரு வேலைகளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

மார்ச் 3ம் தேதி தேர் திருவிழாவும், 4ம் தேதி வள்ளி திருமண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும் மார்ச் 5ஆம் தேதி மாசி பிரம்மோற்சவம் முடிந்ததும் தீர்த்தவாரியுடன் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

MUST READ