spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

-

- Advertisement -

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அடையாறு,ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

we-r-hiring

மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதேசியே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அடையாறு, ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் இன்று அதிகாலை, 3:15 மணிக்கு, ஸ்ரீ மூலவர் மற்றும் உற்சவர் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 5:00 மணிக்கு, 336 மகர விளக்கு தீபாராதனை நடைபெற்றது. அதனை அடுத்து அதிகாலை, 5:45 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சொர்க்க வாசல் வழியாக சுவாமி கருடவாகனத்தில் புறப்பாடு  நடைபெற்றது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே இதில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து காலை 7:00 மணி முதல் பக்தர்கள் வரிசையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று இரவு, 9:00 மணி வரை, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ