Homeசெய்திகள்ஆன்மீகம்பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

-

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி 12-ந்தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பூஜைகள் நிறைவடைந்து பிப்ரவரி 17-ந்தேதி நடை அடைக்கப்பட்டது.

Sabarimala Ayyappan Temple - சபரிமலை ஐய்யப்பன் கோயில்

இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும், கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றி பூஜைகளை தொடங்கினார். அதன்பின்னர் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 19-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 26-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

MUST READ