கும்பகோண மாசி மகம் விழா: தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!
கும்பகோணத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் பெருவிழாவின் ஒரு பகுதியான மாசிமக குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியின் போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மகாமக குளக்கரை அருகிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
உலக நன்மைக்காகவும், மக்கள் அமைதியுடன் வாழ வேண்டி ஜப்பான் நாட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவில்களை காண இவர்கள் வந்திருந்தனர். வேட்டி சட்டையுடன் இருந்த ஜப்பான் நாட்டினரை வியந்து பார்த்த பலர் தங்கள் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர்.