Homeசெய்திகள்ஆன்மீகம்எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு

எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு

-

- Advertisement -

எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு

வாஜ்பாய் அரசு நித்ய கண்டம், பூரண ஆயுள் என ஆட்சியை கடத்தி வந்தது. ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றார், 1999ல் பாஜக ஆட்சியை இழந்தது என திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

21

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு, “1962 முதல் இந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக பல்வேறு முக்கிய முடிவுகளில் அங்கம் வகித்துள்ளது. இது சிறப்புக் கூட்டத்தொடர் என்றாலும், இதில் ஒன்றும் சிறப்பு இல்லை. இது இன்னொரு கூட்டம் தான். புதிய கட்டிடம் மிகப்பெரிய தொகை செலவிட்டு கட்டப்பட்டுள்ளது. நாட்டில் கடும் நிதி நெருக்கடி உள்ளபோது, பணத்தை வாரி செலவிட்டுள்ளார்கள். இந்த ஆண்டுக்கான இறுதி கூட்டத்தொடரை இங்கு நடத்தாதது ஏன்? வாஸ்து மீதான நம்பிக்கையா? அல்லது நல்ல நாள் என்று யாரேனும் குறித்துக் கொடுத்துள்ளார்களா? வேறு நல்ல நாள் கிடைக்கவில்லையா?

நல்ல நாள், நல்ல நேரத்தை விட, நல்ல நோக்கம் கொண்ட விவாதங்கள் தான் இருக்க வேண்டும். ஆளும் அரசின் சில சட்டத்திற்கு புறம்பான, ஜனநாயகத்திற்கு புறம்பான நோக்கத்தில் சில மசோதாக்களை நிறைவேற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் தற்போதைய ஆளும்கட்சியை சாராத நபர்களால் தான் நாடு ஆளப்பட்டுள்ளது. நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ராஜிவ்காந்தி ஆகியோரால் இந்த நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. நாடு இக்கட்டான சூழலில் இருந்தபோது, நாட்டை காக்க தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். 75 ஆண்டு காலத்தில் இவர்களின் பங்களிப்பு போற்றப்பட்ட வேண்டும். இந்த 75 ஆண்டுகளில் மாநில கட்சியான திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பும் அதிகம்.

"சேது சமுத்திரத் திட்டம் என்னவானது?"- மக்களவையில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி!
Photo: Sansad Tv

பேரறிஞர் அண்ணா திராவிட நாடு குறித்து பேசினாலும், அன்பை தான் விதைத்தார். பாஜகவை நீண்ட இழுபறிக்கும் பிறகு ஆட்சிக்கு கொண்டு வந்தார் வாஜ்பாய். வாஜ்பாய் ஆட்சியை நித்திய கண்டம், பூரண ஆயுசு என்று நடத்தி வந்தார். வாஜ்பாய் அரசுக்கு ஜெயலலிதா ஆயுட்காலத்தை வழங்கி வந்தார். தன் ஆதரவை அவர் வாபஸ் பெற்றதும், 1999ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. திமுக அவருக்கு ஆதரவு அளித்தும், 1 வாக்கில் அவர் ஆட்சியை இழந்தார். வாஜ்பாய் தனித்துவமிக்க தலைவர். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவானவர். திமுக ஆதரவுக்கு பிறகு தான் முழு ஆட்சிக் காலத்தை அவரால் பூர்த்தி செய்ய முடிந்தது. தற்போதைய ஆளும் அரசு, ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட அரசை அமைக்க திமுக அளித்த பங்களிப்புகளை நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

MUST READ