Homeசெய்திகள்ஆவடிஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்

ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்

-

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்து கொண்டு நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறோம்..எங்களின் இடத்தையும் அபகரித்து துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம் கண்ணீர் மல்க பேட்டி…

மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பட்டமந்திரி திருவிக தெருவை சேர்ந்த மலர்க்கொடி (60) இவரது கணவன் பரமசிவம் இறந்த நிலையில், இவர்களது மகன்கள் அமிர்தலிங்கம் மற்றும் மதன் உடன் வசித்து வருகிறார்.

ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பொன்னேரி வட்டம், வல்லூர் கிராமத்தில் உள்ள பழைய சர்வே எண் 499/1B பா புதிய சர்வே எண் 1644/3ல் பட்டா எண் 253 கடந்த 1995ம் ஆண்டு நத்த நிலவரித் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் எங்களுக்கு எனது கணவர் பரமசிவன் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. அதில் சின்ன செங்கன் மகன் பரமசிவன் என்பதற்கு பதிலாக சர்க்கரை மக்கள் 1.பரமசிவன் 2. சின்ன செங்கன் என தவறுதலாக பதிவிடப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்

என் கணவர் 1982 ல் இறந்துவிட்டார். என் மாமனார் 1980 ல் இறந்தவிட்டார். நானும் என் மகன்கள் அமிர்தலிங்கம் மற்றும் மதன் உடன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் வீடு கட்டி நிரந்தரமாக வசித்து வருகிறோம். இந்த நிலையில், கடந்த ஜூலை 25ஆம் தேதி பிரபு என்பவர் எங்கள் இடத்தில் அத்துமீறி நுழைந்து, இந்த இடம் எனக்கு சொந்தமானது என கூறி பிரச்சனை செய்து வீடு கட்ட முயற்சித்தார். நாங்கள் சர்வேயரை வைத்து அளந்து முறையாக வேலை செய்யுங்கள் என சொன்னதற்கு என்னை மிரட்டி தாக்கினர்.

மேலும், அந்த நிலத்தை 1644/3B என போலியான சர்வே எண் கொண்டு திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரபு என்பவருக்கு தேவி என்பவர் போலியாக பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார்.  இதை அறிந்தவுடன் பொன்னேரி சார் ஆட்சியரிடமும், பொன்னேரி வட்டாட்சியரிடமும் கடந்த 28.07.2023 அன்று புகார் மனு அளித்து கிராம நிர்வாக அலுவலர் அவர்களால் விசாரனை செய்து இந்த இடத்தில் நாங்கள் தான் வசித்து வருகிறோம் என்றும் புதியதாக சர்வே எண் உட்பரிவு ஏதும் செய்யவில்லை எனவும் விசாரனை அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்

விசாரனை நடந்துக் கொண்டிருக்கும் போதே பிரபு என்பவர் அத்து மீறி இடத்தை சுத்தம் செய்து வேலை செய்தார். நாங்கள் தடுத்து அவசர உதவி காவல் கட்டுப்பாடு எண் 100 க்கு  தொடர்புக் கொண்டு புகார் அளித்தோம். ஆனால் அதை சரியாக விசாரிக்காமல் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் என் மகன் அமிர்தலிங்கத்தை மிரட்டி பிரபு என்பவருக்கு சாதகமாக எழுதி வாங்கியுள்ளார். அவர்கள் வீட்டு வேலை செய்வார்கள் தடுத்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து உங்களை குடும்பத்தோட உள்ளே தள்ளி விடுவேன் என ஆய்வாளர் அச்சுறுத்துகிறார்.

அரசாங்கம் எங்களுக்கு கொடுத்த நிலத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சியில் எங்களை வாழ விடாமல் பிரச்சனை செய்கிறார்கள்.  முறையான விசாரனை நடத்தி எங்கள் நிலத்தை மீட்டு போலியான பத்திர பதிவு செய்ய துணை போனவர்கள் மற்றும் என்னையும் என் மகன்களையும் மிரட்டி எழுதி வாங்கிய மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

MUST READ