Homeசெய்திகள்ஆவடிமேக் இன் இந்தியா- செயலாக்கம் மூலம் டி.ஆர்.டி.ஓ தேசத்தை வலுப்படுத்தும், பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய்...

மேக் இன் இந்தியா- செயலாக்கம் மூலம் டி.ஆர்.டி.ஓ தேசத்தை வலுப்படுத்தும், பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் நம்பிக்கை

-

ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் வருகை!!!!

ஆவடியில் உள்ள சி.வி.ஆர்.டி.இ நிறுவனத்திற்கு அமைச்சர் அஜய் பட் முதல் பயணம் :மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு. அஜய் பட், 05 செப்டம்பர் 2023 நேற்று சென்னை, ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (சி.வி.ஆர்.டி.இ) தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். தனது பயணத்தின் போது, மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் மூத்த விஞ்ஞானிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். மற்றும் சி.வி.ஆர்.டி.இ.யில் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். சி.வி.ஆர்.டி.இ உருவாக்கிய பல்வேறு சாதனைகள் மற்றும் முக்கியமான தொழில்நுட்பம்/ தயாரிப்புகள் குறித்து சிறப்பு விஞ்ஞானி மற்றும் இயக்குநர் ஜெனரல் (ஏ.சி.இ) டாக்டர் எஸ்.வி.காடே ஒரு விளக்கக்காட்சியை வழங்கினார். சி.வி.ஆர்.டி.இ., இயக்குனர் பாலமுருகன், தற்போதைய நிலை மற்றும் நடந்து வரும் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து விளக்கினார்.

சி.வி.ஆர்.டி.இ உருவாக்கிய மேம்பட்ட அமைப்புகளைப் பற்றி அறிய மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டினார்.மேலும் அந்தந்த திட்டத் தலைவர்கள் அவற்றின் அமைப்புகளின் தனித்துவத்தை எடுத்துரைத்தனர். அவர் குழு உறுப்பினர்களுடன் மெயின் போர் டாங்கியில் (அர்ஜுன் எம்.கே-ஏ) சவாரி செய்தார்.மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டாங்கியின் மேம்பட்ட அம்சங்களை அறிந்து கொண்டார்.

ஆவடியில் உள்ள சி.வி.ஆர்.டி.இ நிறுவனத்திற்கு அமைச்சர் அஜய் பட் முதல் பயணம் :மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சி.வி.ஆர்.டி.இ சகோதரத்துவத்தை பாதுகாப்புத் தளத்தில் இடைவிடாத முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்காக பாராட்டினார். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளில் தற்சார்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ‘மேக் இன் இந்தியா’ கருத்தாக்கத்தின் மூலம் டி.ஆர்.டி.ஓ தேசத்தை வலுப்படுத்தும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

MUST READ