Homeசெய்திகள்வணிகம்நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

-

- Advertisement -

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2,360 குறைந்தது – வெள்ளியும் விலை வீழ்ச்சி!நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 25) அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிந்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.295 குறைந்து ரூ.11,420-ஆக உள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.165-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரே நாளில் கணிசமாகக் குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு

MUST READ