சென்னை மாதவரத்தில் திருமண மண்டபத்தில் உள்ள லிப்டில் சிக்கிக்கொண்ட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.


சென்னை மாதவரம் அருள்நகர் பகுதியில் உள்ள கன்னிகா மஹால் மால் திருமண மண்டபத்தில் இன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மணமக்கள் உறவினர்கள் 11 பேர், மேல் தளத்திலிருந்து தரை தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் இறங்கியுள்ளனர். அப்போது திடீரென லிப்ட் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் அவர்கள் 11 பேரும் லிப்டுக்குள் சிக்கி தவித்தனர். இது குறித்து உடனடியாக மாதவரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடப்பாரை மற்றும் உபகரணங்களை வைத்து லிப்டுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். அப்போது மீட்கப்பட்ட 3 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மாதவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


