Homeசெய்திகள்சென்னை2 மாதங்களில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி

2 மாதங்களில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி

-

2 மாதங்களில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி

சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் 120 கோடி மதிப்பீட்டில் 193 கிமீ நீளத்தில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai Road Works,பளபளக்கும் சென்னை சாலைகள்... 2 மாதங்களில் நடந்த அதிரடி  மாற்றம்! - chennai corporation said 1093 road works done in last 2 months -  Samayam Tamil

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2023- 24ஆம் நிதியாண்டில் ரூ.433.28 கோடி மதிப்பீட்டில் 645 கிமீ நீளத்திற்கு 3676 எண்ணிக்கையிலான சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பங்கள் கோரப்பட்டது. இவற்றில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 169 கி.மீ.நீளத்தில் 897 எண்ணிக்கையிலான தார்சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.20.69 கோடி மதிப்பீட்டில் 24 கி.மீ நீளத்தில் 196 சிமெண்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம், ஆலந்தூர் மண்டலத்திற்குப்பட்ட மணப்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வளசரவாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகள் கடந்த இரண்டு மாதங்களில் கொசஸ்தலையாறு வடிநில திட்ட நிதியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 703 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளில் 119.57கிமீ,நீளத்திற்கும் கோவளம் வடிநில திட்ட நிதியின் கீழ் கோவளம் வடிநிலப் பகுதியில் 160 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளில் 48 கிமீ, நீளத்திற்கும், மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 60 கிமீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.55 கி.மீ நீளத்திற்கும், பெருநகா சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 7.40 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.77 கி.மீ. நீளத்திற்கும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதியின் கீழ் 1 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 0.39 கிமீ. நீளத்திற்கும். தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை சாலைகள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் -  Oneindia Tamil

சாலை அமைக்கும் பணிகளும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிக்காமல் காலம் தாழ்த்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

MUST READ