Homeசெய்திகள்சென்னைமாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

-

மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளரான விவேக் என்பவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதோடு, சுகாதரத்துறை சார்பில் ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Cow

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெருவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மாடு முட்டியது. இதில் அச்சிறுமி படுகாயமடைந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர், “சென்னை பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று பெரம்பூர் மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் வைக்கிறோம். ஒரு மாட்டிற்கு 2,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்படுகிறது” என்றார்.

Radhakrishnan

மாடு முட்டி சிறுமி காயமடைந்த சம்பவத்தில் மாட்டின் உரிமையாளர் விவேக் மீது 2 பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் விவேக்கிடம் போலீசார் விசாரிக்கையில், “ வீட்டில் கட்டிப்போட்டிருந்த மாட்டை யாரோ அவிழ்த்து விட்டுள்ளனர். மாட்டை நாய் கடித்துள்ளது. பள்ளிக் குழந்தையும் விளையாட்டாக மாட்டிடம் விளையாண்டுள்ளது, இதனால் தான் மாடு சிறுமியை முட்டியுள்ளது” என்றார்.

MUST READ