Homeசெய்திகள்சென்னைமுகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு

-

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு

ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு கடந்த மாதம் முதல்வர் நிலம் ஒதுக்கீடு செய்திருந்தார். இன்று அந்த நிலத்திற்கு பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது… இதில் அமைச்சர் காந்தி, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்  சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் தானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த சூழலில் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறுமி தானியா  கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து  முதலமைச்சர் அறிந்தவுடன் உடனடியாக சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு சவிதா மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி சிறுமிக்கு முதல்கட்ட முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சவீதா மருந்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

இதன் பின்னர் டிசம்பர்  மாதம்  இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுதும்  மோரையில் உள்ள சிறுமி தானியாவின் வீட்டிற்கு நேரில் சென்று  முதலமைச்சர் நலம் விசாரித்தார். ஏற்கனவே சிறுமி தானியாவின் கல்வி படிப்பு மற்றும் அதற்கான செலவினை அப்பகுதி திமுக பிரமுகர் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருந்தார். இதற்காக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் சிறுமி தானியாவை அருகில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்.

தொடர்ந்து அறுவை சிகிச்சை பள்ளிப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்திருந்த நிலையில் கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின்  தானியா  சிறுமிக்கு திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த  பாக்கம் பகுதியில் 3 சென்ட் இலவச பட்டாவை வழங்கினார். தற்போது அந்த இடத்தில் இன்று காலை வீடு கட்ட நகர்புற வீடு கட்டும் அரசு திட்டத்தின் கீழ் அரசு மானியம் 2 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் அமைச்சர் காந்தி தானியா மற்றும் அவர்கள் பெற்றோரிடம் வழங்கி வீடு கட்ட அடிக்கல் நாட்டினார், இவ்விழாவில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியார்களை சந்தித்த தானியாவின் தாய் சௌபாக்கியா. எங்கள் குழந்தைக்கு இந்த நோயால் கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தோம்…. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சூழ்நிலையில்…. தானியாவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறுவை சிகிச்சை ஏற்பாடுகளை செய்திருந்தார்… பின்னர் மருத்துவமனை மற்றும் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்தார்… இன்று என் குழந்தை நலமுடன் வாழ்வதற்கு முக்கிய காரணம் முதல்வர் ஸ்டாலின் ஐயா தான்…. அதேபோல் தானியாவின் குழந்தைக்கு பள்ளிச் செலவு உள்ளிட்ட அனைத்து உதவி செய்த  தலைவர்களுக்கும் நன்றி… ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் ஐயாவிற்கு மிக மிக நன்றி.

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு
அம்மா, அப்பா, சிறுமி தானியா

நாங்கள் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்த சூழ்நிலையில் வாடகை வீட்டில் குடியிருக்கும் போது வீட்டை எப்போது காலி செய்வீர்கள் என்று கேட்டு நிறைய பேர் எங்களை தொந்தரவு செய்தார்கள்.இதைக் கேள்விப்பட்டு எங்கள் முதல்வர் ஐயா அவர்கள் நிலம் ஒதுக்கீடு தந்தது மட்டும் இல்லாமல் தற்போது வீடு  கட்டுவதற்கு அரசு மானியம்  வழங்கியிருக்கிறார். அவர் என்றுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைத்து கடவுளையும் வேண்டுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தான் எங்களுக்கு குலதெய்வம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

குழந்தை தானியா:

 

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு
சிறுமி தானியா

நாங்கள் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்தோம் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு உதவி செய்கிற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவிற்கு நன்றி மற்றும் நாசர் ஐயா அவர்களுக்கு நன்றி எங்களுக்கு வீடு கட்ட உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

MUST READ