spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமடிப்பிச்சை எடுத்து சிறை கைதிகளுக்கு புத்தக தானம் கொடுத்த நடிகர் பார்த்திபன்

மடிப்பிச்சை எடுத்து சிறை கைதிகளுக்கு புத்தக தானம் கொடுத்த நடிகர் பார்த்திபன்

-

- Advertisement -

சென்னை 46 ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்து புத்தக விற்பனையில் ஈடுபட்டாலும், கூண்டுக்குள் வானம் என்ற திரை துறையின் புதிய முயற்சி அனைவராலும் கவரப்பட்டது.பார்த்திபன்

சிறை கைதிகளுக்காக புத்தக தானம் செய்பவர்கள் இந்த கூண்டுக்குள் வானம் என்ற அரங்கில் புத்தகங்களை தானம் செய்தனர். அந்த அடிப்படையில் 17,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்கள் மூலம் தானமாக சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த அரங்கிற்கு நடிகர் பார்த்திபன் வருகை தந்திருந்தார். ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்யும் நடிகர் பார்த்திபன் புத்தக தானம் வழங்கும் இந்த முயற்சிக்கும் புதிய வகையில் புத்தகங்களை சேகரித்துக் கொடுத்துள்ளார்.

we-r-hiring

புத்தகக் கண்காட்சியில் உள்ள ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று மடிப்பிச்சை கேட்டு சுமார் 1000 புத்தகங்களை சேகரித்து சிறைத்துறைக்கு கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இது குறித்து நடிகர் பார்த்திபன் தன்னுடைய வித்தியாசமான பாணியின் மூலமாகவே பேச ஆரம்பித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். எதையும் வித்தியாசமாக செய்யும் தான் இந்த புதிய முயற்சியையும் மக்களுக்கு கொண்டு சேர்வதற்காக தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை வைத்து படிப்பு செயின் மூலம் புத்தகங்களை சேகரித்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

வெறுமனே புத்தகம் தானமாக கொடுங்கள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் பலரும் புத்தகங்கள் கொடுக்க முன்வருவார்கள் என்ற அடிப்படையில் புத்தகங்கள் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது சிறைத்துறையில் இந்த புத்தகங்களை வைப்பதற்காக வசதிகளை செய்து கொடுத்து நூலகம் அமைக்க உதவ இருப்பதாகவும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதன் நூலகத் திறப்பு விழாவையும் சிறப்பாக செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிய செய்தியை சொல்கிறது. ஆட்டோ சங்கர் சிறைச்சாலையில் புத்தகம் படித்ததால் ஞானம் வந்ததாகவும், உணர்ச்சிவயப்பட்டு செய்த குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் கைதிகளை உணர வைப்பதற்காக சிறைக்குள் அடைக்கப்படுகின்றனர். இது போன்ற புத்தகங்கள் வாசிப்பதால் அறிவு வெளிச்சம் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் கைதிகளுக்கு புத்தகங்களை பெற்று தந்ததாக தெரிவித்துள்ளார்.

சிறைத் துறையில் அழகான நூலகம் என்ற பெயரில் உருவாக்கி அதனை நடிகர் அஜித், விஜய் போன்ற பிரபலங்களை வைத்து திறக்க வைத்தால் நூலகத்தின் மீது கைதிகளுக்கு ஈர்ப்பு வரும். எழுத்துத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அழைத்து பேச வைத்து நூலகத்தின் மீதான கவனத்தை ஈர்க்க வைக்கலாம் என சிறைத்துறைக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கைகளை வைத்துள்ளார். இது போன்ற உண்மையான ஹீரோயிசங்களை பிரபல ஹீரோக்கள் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புத்தக தானம் என்பது புத்தகக் கண்காட்சியோடு நின்று விடாமல் தொடர்ந்து புத்தகங்களை அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என அனைத்து புத்தக பதிப்பாளர்களுக்கும் நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ