spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்

அம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்

-

- Advertisement -

ஏப்ரல் 14ஆம் தேதியன்று டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியுள்ள புஸ்ஸி ஆனந்த், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்

we-r-hiring

ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் வரை ஒவ்வொரு மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது, அந்தந்த மாவட்டத்திற்கு சென்று இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் இயக்கம் தொடர்பான புதிய படிவங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் புதிய உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்

மேலும் வாரிசு திரைப்படத்திற்கு முன்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட 12கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய். சிறிய இடைவெளிக்கு பிறகு மீதமுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை விரைவில் சந்திக்க திட்டம் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ