ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேரை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவர்களில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 10 பேர் கடந்த 7ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது ஆம்ஸ்டிராங் கொலையில் தொடர்புடைய மேலும் 15 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் அருண் உத்தவிட்டுள்ளார. அதன்படி முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முன்னாள் அதிமுக நிரவாகி மலர்கொடி உள்ளிட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டததில் அடைக்கப்பட்டனர். இதனால் ஆம்ஸ்டிராங் வக்கில் குண்டர் சட்டத்தில கைதானவரகளின எணணிக்கை 25ஆக உயரநதுள்ளது
இதனிடையே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், போதை பொருட்களை விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுள்ளளது.