spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகாதலர் தினத்தை கோயம்பேட்டில் ரோஜா பூ விறுவிறு விற்பனை!

காதலர் தினத்தை கோயம்பேட்டில் ரோஜா பூ விறுவிறு விற்பனை!

-

- Advertisement -

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ரோஜா பூ விற்பனை விறுவிறு – சரக்கு வரத்து இரண்டு மடங்காக உயர்வு.

காதலர் தினத்தை கோயம்பேட்டில் ரோஜா பூ விறுவிறு விற்பனை!20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மஹால் ரக ரோஜா  350 முதல் 450 ரூபாய்க்கு விற்பனை. உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு ரோஜாப் பூக்கள் வரத்து  இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

we-r-hiring

நீலகிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு மற்றும் மைசூர் போன்ற பகுதிகளிலிருந்து கோயம்பேடு சந்தையில் ரோஜா பூக்கள் வந்து குவிந்துள்ளன. வழக்கமான நாட்களில் 5 முதல் 7 டன் வரை ரோஜா பூக்கள் கொண்டுவரப்படும். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்து 15 டன் ரோஜா பூக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மஹால் ரக ரோஜா பூக்கள் நேற்று 200 முதல் 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 350 முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நோபிள்ஸ் பிங்க் ரக ரோஜா 250 முதல் 400 ரூபாய்க்கும், ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா 200 முதல் 350 ரூபாய்க்கும், ரேட் ரோஸ் 300 முதல் 500க்கும், ஜப்பூரா 100 முதல் 150 ரூபாய்க்கும், கலர்ரோஸ் 200 முதல் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் பூக்களின் விலை உயரும் என்றும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளது என்றும் வியாபாரிகள் தகவலாக தெரிவிக்கின்றனர்.

MUST READ