சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீடீரென காா் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர் தப்பினர்.
தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த புதியவன். இவர் தனக்கு சொந்தமான XUV500 மகேந்திரா காரில் உறவினர்கள் மூன்று பேருடன் திருவள்ளூர் செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை எழில் நகர் புதிய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது காரின் முன்பக்க இஞ்சின் பகுதியில் தீடீரென தீபிடித்து புகை வருவதை பார்த்த புதியவன், உடனடியாக காரில் இருந்து மூன்று பேரும் இறங்கினர்.
இதனை அடுத்து கார் எரிய தொடங்கியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர். கொருக்குப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கார் தீ பற்றி எரிந்தது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
