- Advertisement -
தொழில் உரிமத்தை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
எனினும் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று வரும் 31 ஆம் தேதிக்குள் தொழில் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.