
சென்னை மாநகரில் உள்ள 33 அரசு பேருந்து பணிமனைகளில் பேருந்துகள் வெளியே வராமல் முடக்கம் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வழக்கம்போல மீண்டும் பேருந்துகள் இயங்கியது.

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
ஆவடி பேருந்து பணிமனையில் சுமார் 1,000 பேர் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் துறை (Out sourcing) மூலம் பணி அமர்த்தி, அவர்களுக்கு தற்காலிக பணி நியமனம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகரிலுள்ள 33 பேருந்து நிலைய பணிமனையில் 10 பணிமனைகளில் தனியார் நிறுவனங்களின் மூலம் தற்காலிக பணியாளர்கள் இன்று (மே 29) பணி அமர்த்த உயர் அதிகாரிகள் முயற்சி செய்தனர். இந்நிலையில் தனியார் ஊழியர்கள் நியமனத்தை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தடம் என் இல்லாத அரசு பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே எடுத்து வர முயன்ற போது மர்ம நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்திற்கு பிறகு தொழிற்சங்க பேரவை தலைவர் சண்முகம் அறிவுறுத்தலின் பெயரில் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேருந்து இயக்க தொடங்கியது.
தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
நீண்ட நேரம் பேருந்து இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் அங்கிருந்த காவலர்கள் தனியார் பேருந்து மற்றும் வேன் மூலம் பொதுமக்களை அவரவர் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இரண்டு மணி நேரம் நடந்த போராட்டம் சுமூகமாக முடிவடைந்தது.அதன் பிறகு அனைத்து வழித்தட பேருந்துகளும் நன்றாக அந்தந்த பகுதிக்கு வழக்கம்போல் இயக்கப்பட்டதாக ஆவடி பணிமனை தொ.மு.ச. இணை செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


