spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின முதல் அணிவகுப்பு ஒத்திகை

சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின முதல் அணிவகுப்பு ஒத்திகை

-

- Advertisement -

சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

குடியரசு ஒத்திகை

we-r-hiring

அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் விழாவை வேறு பகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பின் மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று முதலாவது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், தமிழக காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை நீலகிரி படைப்பிரிவு கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை தீயணைப்புத்துறை வனத்துறை, கமோண்டோ படை, முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

MUST READ